அன்புள்ள மிதுன ராசிக்காரர்களே,
இவ்வாரம் சந்திரன் உலவும் அமைப்பு சிறப்பாக அமையும். புதன், சுக்கிரன், செவ்வாய், கேது அருள்புரிவர். குரு இடைநிலைப் பலன்களைத் தருவார். சனி, ராகு, சூரியன் தொல்லை தருவர்.
சூழ்நிலைக்கேற்ப திட்டங்களைத் தீட்டிக் கச்சிதமாகச் செயல்படும் புத்திசாலிகள் நீங்கள். தற்போதுள்ள கிரக அமைப்பு வாழ்க்கையில் ஏற்றங்களைத் தருகிறதோ இல்லையோ இறக்கங்களை ஏற்படுத்தாது. அடுத்து வரும் நாட்களில் உங்களது உடல்நலம் நன்றாக இருக்கும். மனத்திலும் புத்துணர்ச்சி அதிகரிக்கும். தற்போது நீங்கள் கால்பதிக்கும் பணிகளில் தடைகள் எட்டிப்பார்க்கும். கூடுதல் உழைப்பும் முனைப்பும் இல்லையென்றால் பொறுப்புகள் தேங்கிப் போகும். புது முயற்சிகளில் ஈடுபட இது உகந்த நேரமல்ல. வருமான நிலை ஓரளவு மனநிறைவு தரும். வழக்குகள், சொத்துகள் தொடர்பான முயற்சிகள் இழுத்தடிக்கக்கூடும். பணியாளர்கள் வீண் பேச்சு வளர்க்காமல் காரியமே கண்ணாகச் செயல்படுவது நல்லது. வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். வார இறுதியில் வீண் செலவுகள் அதிகரிக்கும். இச்சமயம் பண விவகாரங்களில் கவனம் தேவை.
வீட்டில் இயல்புநிலை இருக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர்.
அனுகூலமான நாள்கள்: மே 20, 22
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

