அன்புள்ள கடக ராசிக்காரர்களே,
மாதக் கோள்கள் புதன், சுக்கிரன், சூரியன் சிறப்பான இடங்களில் சஞ்சரிக்கின்றன. செவ்வாய், சந்திரன் அருள்புரிவர். சனி, ராகு, கேதுவால் நலமில்லை. குருவின் மங்கலத்தன்மை குறையும்.
நல்ல நட்பும் சுற்றமும் வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள். இவ்வாரம் உங்களது வாழ்க்கைப் பயணத்தில் மேடு, பள்ளம் இரண்டும் இருக்கும். முக்கியப் பொறுப்புகளைத் தனித்து நிறைவேற்றுவது நல்லது. தனித்திறமைகள், நெருக்கமானவர்களின் உதவிகள் கைகொடுக்கும். முக்கியப் பணிகளை முடித்து நிம்மதி காண்பீர்கள் என நம்பலாம். எதிர்பார்த்த தொகைகள் கைக்கு வந்து சேரும். அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். உபரி வருமானத்துக்கு முயற்சிப்பதால் பலனில்லை. நட்பு மற்றும் உறவு வட்டாரங்களுடன் அளவோடு பேசிப் பழகுவது நல்லது.
உங்கள் மீது பழி போடவும் உங்களைக் குறை கூறவும் சில தரப்பினர் காத்திருப்பார்கள். அத்தகையவர்களை இனம் கண்டு ஒதுங்கி நிற்கப் பாருங்கள். பணியாளர்களும் தொழில் முனைவோரும் சிறு சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வார இறுதியில் தடைகள் குறையும். மனத்தில் தெளிவும் துணிச்சலும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோர் நல்ல அறிவுரைகளைக் கூறி வழிநடத்துவர்.
அனுகூலமான நாள்கள்: மே 18. 20
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

