அன்புள்ள சிம்ம ராசிக்காரர்களே,
உங்கள் ராசிக்கு சிறப்பான இடத்தில் வீற்றிருக்கும் குரு அருள்பார்வை பொழிவார். புதன், சூரியன், சுக்கிரன், சந்திரன் நலம்புரிவர். செவ்வாய், கேது, சனி, ராகு வகையில் சங்கடங்கள் இருக்கும்.
நினைத்ததைச் சாதிக்கும் வரை ஓயாமல் உழைக்கக்கூடிய லட்சியவாதிகள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் வழக்கமான பணிகள் காத்திருக்கும். நீங்களும் அவற்றை வழக்கம்போல் செய்துமுடிப்பீர்கள். உழைப்புக்குரிய ஆதாயங்கள் தடையின்றிக் கிடைத்திடும். புதுப்பொறுப்புகளை ஏற்பதற்கு முன் அனுபவசாலிகளுடன் கலந்தாலோசிப்பது நல்லது. சிறு தடைகளை உங்கள் உழைப்பு தவிடுபொடியாக்கும்.
தற்போது உடல்நலம் பொதுவாக நன்றாக இருக்கும். ஒருசிலருக்கு மட்டும் வயிற்றுவலி, கால் குடைச்சல் என்று சிறு உபாதைகள் தோன்றி மறையும். அடுத்து வரும் நாள்களில் பணம் கொடுக்கல் வாங்கலை அறவே தவிர்க்கப் பாருங்கள். வழக்கமான செலவுகளை ஈடுகட்டும் வகையில் வரவுகள் வந்து சேரும். பணியாளர்களும் வியாபாரிகளும் முன்னேற்றப் பாதையில் செல்வர். வார இறுதியில் நல்ல மனம் படைத்தவர்களின் அறிமுகம் கிட்டும். அவர்களுடன் கைகுலுக்கலாம்.
இல்லறம் இனிக்கும். மனைவி, மக்கள் அன்பாக இருப்பர்.
அனுகூலமான நாள்கள்: மே 19, 21
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4

