கன்னி (VIRGO)

கன்னி (VIRGO)

1 mins read

அன்­புள்ள கன்னி ராசிக்­கா­ரர்­களே,

நிழல் கிரகமான ராகுவின் அமைப்பு சிறப்பாக அமையும். புதன், சூரியன், சுக்கிரன், சந்திரன் நற்பலன்களைத் தருவர். குரு, சனி, கேது, செவ்வாயின் மங்கலத்தன்மை கெடும்.

விருப்பு வெறுப்பு இன்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர்கள் நீங்கள். இவ்வாரம் அதிகம் பேசுவதைவிட காரியத்திலேயே குறியாக இருப்பது நல்லது. தேடி வந்து வம்பிழுப்பவர்களைக் கண்டுகொள்ள வேண்டாம். தற்போது பொறுப்புகள் அதிகரிக்கும். இடையூறுகளும் இருக்கும். அனைத்தையும் சமாளித்து திட்டமிட்ட வேலைகளை முடிக்க நெருக்கமானவர்கள் தோள்கொடுப்பர். உடல்நலனில் அக்கறை தேவை. உழைப்புக்குரிய ஓய்வு அவசியம். அடுத்து வரும் நாள்களில் உங்களுக்குரிய பொருளியல் ஓரளவு மனநிறைவு தருவதாக இருக்கும். வீட்டுத் தேவைகள் குறைவின்றி நிறைவேறும். சொத்துகள், மங்கலப் பேச்சுகள் தொடர்பில் வீட்டுப் பெரியவர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது. பயணங்களை ஏற்கும் முன் அவற்றால் ஆதாயம் உண்டா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். பணியாளர்களும் வியாபாரிகளும் அகலக்கால் வைப்பதைத் தவிர்க்கவும். வார இறுதியில் சாதகமான விஷயங்கள் நடக்கும். எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உடன்பிறந்தோர் உதவுவர்.

அனுகூலமான நாள்கள்: மே 21, 22

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9