அன்புள்ள தனுசு ராசிக்காரர்களே,
ஆண்டுக் கோள்களான குரு, ராகுவின் அமைப்புகள் சிறப்பாக உள்ளன. புதன், சூரியன் நலம்புரிவர். சனி, கேது, செவ்வாய், சுக்கிரன், சந்திரனின் மங்கலத்தன்மை கெடும்.
அடுத்து வரும் நாள்களில் உங்களது செயலாற்றல் சிறக்கும். எந்த வேலையாக இருந்தாலும் உங்களுக்கே உரிய தனித்தன்மையுடன் செய்து முடிப்பீர்கள். உழைப்புக்குரிய ஆதாயங்கள் தன்னால் தேடிவரும். தடைகளை எளிதில் கடந்திடுவீர்கள். சுற்றுவட்டாரத்தில் உங்களது செல்வாக்கும் ஏற்றம் காணும். திறமைக்கேற்ற புதிய பொறுப்புகளை ஏற்பதில் தவறில்லை. நட்பு, உறவு வட்டாரங்களுடன் அளவுக்கு மீறிய நெருக்கம் வேண்டாம். உங்கள் உடல்நலனில் சிறு குறையும் இருக்காது. நாள் முழுவதும் உற்சாகமாகவும் வேகமாகவும் செயல்படுவீர்கள். குடும்பத்தாரும் நலமாக வலம்வருவர். வருமான நிலை நன்றாக இருக்கும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவது உங்கள் பொறுப்பு. நீண்ட காலமாக இழுபறியில் இருந்த மங்கலப் பேச்சுகள் இப்போது கைகூடும் வாய்ப்புண்டு. பணியாளர்கள் ஏற்றம் காண்பர். வியாபாரத்தில் இருந்த சிக்கல் விலகிடும். வார இறுதியில் திடீர் பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். இச்சமயம் அறிமுகமற்றவர்களை நம்பி எதுவும் செய்ய வேண்டாம். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்குரிய சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்லது.
குடும்பத்தில் உற்சாகம் நிறைந்திருக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகள் பளிச்சிடும்.
அனுகூலமான நாள்கள்: மே 18, 20
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

