அன்புள்ள மகர ராசிக்காரர்களே,
இவ்வாரம் சனிபகவானின் அமைப்பு அமோகமாக உள்ளது. புதன், சுக்கிரன், சந்திரனின் ஆதரவு கிட்டும். குரு, ராகு, கேது, சூரியன், செவ்வாய் வலுவிழப்பர்.
இவ்வாரம் உங்களுக்குரிய வரவுகள் சிறப்பாக இருக்கும். வழக்கமான தொகை குறித்த நேரத்தில் கிடைத்திடும். செலவுகளும் தேவைகளும் அதிகம்தான் என்றாலும் அவற்றைச் சமாளிப்பதில் சிரமம் இருக்காது. இவ்வாரம் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். சில பணிகளை உங்களது தனிப்பட்ட திறமையால் கச்சிதமாக முடிப்பீர்கள். எனினும் சில வேலைகளை முடிக்க நண்பர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும். உடல்நலம் ஒரே சீராக இருக்குமா என்பது சந்தேகம்தான். எனவே உழைப்புக்குரிய ஓய்வு எடுப்பது முக்கியம். புதிய முயற்சிகளில் ஈடுபடும்படி ஒருசிலர் வற்புறுத்தக்கூடும். அத்தகைய யோசனைகளை ஏற்க வேண்டாம். பணியாளர்கள் சக ஊழியர்களிடம் நல்லிணக்கம் பாராட்டுவது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கும் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வார இறுதியில் புதிய நட்புகள் கிடைத்திடும். அவர்களுடன் கைகுலுக்கலாம் என்றாலும் வீண் நெருக்கம் பாராட்ட வேண்டாம்.
குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பெற்றோர் ஆதரவு பலம்சேர்க்கும்.
அனுகூலமான நாள்கள்: மே 19, 22
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

