அன்புள்ள கும்ப ராசிக்காரர்களே,
மாதக் கோள்களான புதன், சூரியன், சுக்கிரன் சிறப்பான இடங்களில் சஞ்சரித்து அருள் புரிகின்றன. குரு, சந்திரனால் நலமுண்டு. சனி, ராகு, கேது, செவ்வாய் தொல்லை தருவர்.
எந்நேரமும் இனிய பேச்சுடனும் இன்முகத்துடனும் வலம் வருபவர் என உங்களைக் குறிப்பிலாம். இவ்வாரம் பொருளாதார ரீதியில் சிக்கல் ஏதுமில்லை. எதிர்பார்த்த தொகைகள் அனைத்தும் வந்து சேரும். கையிருப்புக்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிட முடியும். கூடுதல் வருமானத்துக்கு முயற்சிப்பதில் தவறேதுமில்லை. மங்கல காரியங்கள் தொடர்பான பேச்சுகளைத் துவங்க இதுவே உகந்த நேரம். சிறு தூரப் பயணங்கள் இனிய அனுபவங்களைத் தரும். ஈடுபட்ட காரியங்களில் பெரும்பாலானவற்றை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். முக்கியப் பொறுப்புகளை மட்டும் உங்களது நேரடிக் கண்காணிப்பில் செய்துமுடிக்கப் பாருங்கள். ஆதாயங்களும் பாராட்டுகளும் மனநினைவு தரும் புது வேலை தேடியவர்களுக்கு சாதகமான தகவல்கள் கிட்டும். வியாபார விரிவாக்க முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வார இறுதியில் சற்றே நிதானப் போக்கைக் கடைபிடியுங்கள். இச்சமயம் நெருக்கமானவர்களின் ஆதரவு தெம்பளிக்கும். வார இறுதியில் எக்காரணத்தைக் கொண்டும் வாக்குறுதி அளிப்பதோ, பிணை நிற்பதோ கூடாது.
குடும்பத்தில் எந்தக் குறையும் இருக்காது. பெற்றோர் ஆதரவுண்டு.
அனுகூலமான நாள்கள்: மே 3, 4
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

