அன்புள்ள மீன ராசிக்காரர்களே,
நிழல் கிரகமான கேது சிறப்பான இடத்தில் சஞ்சரிக்கிறார். புதன், சூரியன், சுக்கிரன், சந்திரன் சாதகமான பலன்களைத் தருவர். குரு, சனி, ராகு, செவ்வாயின் மங்கலத்தன்மை கெடும்.
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் உங்களுக்குரிய வரவுகள் ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவு மனநிறைவு தருவதாக அமையும். பிள்ளைகளின் கல்வி, வீடு, வாகனம் பராமரிப்பு எனப் பல வகையிலும் செலவுகள் காத்திருக்கும். வேலைப்பளு அதிகரித்திருக்கும். எந்தவொரு பணியையும் முதல் முயற்சியில் முடித்துவிட இயலாது. தனித்திறமைகளும் விடாமுயற்சியும் கைகொடுக்கும் என்பதால் முக்கியப் பொறுப்புகளை முடித்து நற்பெயரைத் தக்கவைப்பீர்கள். உடல்நலனில் சிறு குறையும் இல்லை. வழக்கமான சுறுசுறுப்புடன் வலம்வருவீர்கள். பயணங்கள், புது முயற்சிகளில் நிதானம் தேவை. வழக்குகள் இழுத்தடிக்கும். பணியாளர்களின் தனித்திறமைகள் பளிச்சிடும். கூட்டுத்தொழில் புரிவோர் ஏற்றம் காண்பர். வார இறுதியில் புதியவர்களின் அறிமுகம் கிட்டும். அவர்களுடன் கைகுலுக்கலாம் என்றாலும் வீண் நெருக்கம் கூடாது.
இல்லறச் சக்கரம் வழக்கம்போல் சுழலும். பிள்ளைகள் ஏற்றம் காண்பர்.
அனுகூலமான நாள்கள்: மே 19, 21
அதிர்ஷ்ட எண்கள்: 2, 8

