அன்புள்ள விருச்சிக ராசிக்காரர்களே,
இவ்வாரம் சந்திரனின் அருள்பார்வையைப் பெறுவீர்கள். கேது, செவ்வாய், சுக்கிரன் நற்பலன்களைத் தருவர். புதன், சூரியன், சனி, ராகுவால் நலமில்லை. குருவால் நன்மை, தொல்லை இல்லை.
நல்லதையே நினைத்து நல்லதையே செய்யக்கூடிய பண்பாளர்கள் நீங்கள். தற்போது குருவும் சனியும் சாதகமாக இல்லையே எனப் புலம்ப வேண்டாம். தெய்வம் துணை நிற்பதால் அதிக சிரமங்களின்றி இவ்வாரத்தைக் கடந்திட முடியும். அடுத்து வரும் நாட்களில் பணிச்சுமை திடீரென அதிகரிக்கக்கூடும். எந்த வேலையை முதலில் செய்வது, எதைத் தவிர்ப்பது என முடிவெடுக்க இயலாமல் தடுமாற நேரிடும். நட்பு, உறவு வட்டாரங்களில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். வரவுகள் சுமார் எனலாம். செலவுகளுக்குப் பஞ்சமில்லை. பயணங்கள், புதிய முயற்சிகளால் ஆதாயமில்லை. உடல்நலம் பொதுவாக நன்றாக இருக்கும். எனினும் வீண் அலைச்சல் காரணமாக சிறு உடல் பிரச்சினைகள் தோன்றக்கூடும். பணியாளர்களுக்கு புதுப் பொறுப்புகள் வந்து சேரும். சுயதொழில் புரிவோர்க்கு உரிய உதவிகள் கிடைத்திடும். வார இறுதியில் மேற்கொள்ளும் பயணங்கள் இனிய அனுபவங்களைத் தரும்.
குடும்பத்தில் உள்ள சிறு கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.
அனுகூலமான நாள்கள்: மே 22, 23
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

