அன்புள்ள துலா ராசிக்காரர்களே,
இவ்வாரம் சந்திரன் அருள்பார்வை வீசுவார். புதன், சுக்கிரன், சனி, கேது மேன்மையான பலன்களைத் தருவர். குரு, ராகு, செவ்வாய், சூரியன் வலுவிழப்பர்.
எதிரிகளையும் அரவணைத்துச் செல்லும் பக்குவசாலிகள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் வாழ்க்கைப் பயணத்தில் சில இனிமையான அனுபவங்களை எதிர்கொள்வீர்கள். அதே சமயம் சில சங்கடங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அடுத்து வரும் நாள்களில் ஆதாயங்களுக்கு ஆசைப்பட்டு தேவையின்றி அலைந்து திரியக் கூடாது. சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும் நேரமிது. கவலைப்பட ஒன்றுமில்லை என்றாலும் வீண் அலட்சியம் சிக்கலைப் பெரிதாக்கிவிடக் கூடும். வேலைப்பளு சற்றே அதிகரிக்கலாம். தடைகளும் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் சமாளித்திடுவீர்கள். புது முயற்சிகள், மங்கள பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். வரவுகள் திருப்தி தரும். செலவுகளும் அதிகரிக்கும். பணியாளர்களும் வியாபாரிகளும் ஏற்றம் காண்பர். வார இறுதியில் புது விரயங்கள், விவகாரங்கள் தலைதூக்கும் வாய்ப்புண்டு. இச்சமயம் அறிமுகமற்றவர்களை நம்ப வேண்டாம்.
குடும்பத்தில் சிறு குறையும் இருக்காது. உடன்பிறந்தோர் ஆதரவுண்டு.
அனுகூலமான நாள்கள்: நவம்பர் 3, 4
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

