துலாம் (LIBRA)

துலாம் (LIBRA)

1 mins read
587a49b9-888e-4d97-8051-989df65ea545
-

அன்­புள்ள துலா ராசிக்­கா­ரர்­களே,

மாதக் கோளான சூரியன் இடம்பெயரும் அமைப்பு சிறப்பாக அமையும். சனி, குரு, கேது, புதன், சுக்கிரன், சந்திரன் ஏற்றமான பலன்களைத் தருவார்கள். ராகு, செவ்வாயின் ஆதரவு இல்லை.

அறிவாற்றல் இருப்பின் எதையும் சாதிக்கலாம் என நம்புகிறவர்கள் நீங்கள். இவ்வாரம் பொருளாதார ரீதியில் பலமாக இருப்பீர்கள். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். வரவுகள் தடையின்றிக் கிடைத்திடும். மறுபுறம் செலவுகளும் வரிசைகட்டி நிற்கும். குடும்பத்தார் வகையில் விரயங்கள் உண்டாகும். அதைத் தடுப்பது உங்கள் பொறுப்பு. புது முயற்சிகளில் நிதானம் வேண்டும். ஆதாயங்களுக்கு ஆசைப்பட்டு, அலைந்து திரிய வேண்டாம். முக்கியமற்ற சந்திப்புகளைத் தவிர்க்கவும். திட்டமிட்ட பணிகளில் பெரும்பாலும் முதல் முயற்சியிலேயே சாதகமாகும். பிறரது பணிகளிலும் உதவும் உங்கள் திறமைக்குப் பாராட்டுகள் வந்துசேரும். எது எப்படியோ, உடல்நலனில் மட்டும் சிறு குறையும் இருக்காது. வேகமாகவும் உற்சாகமாகவும் செயல்படுவீர்கள். பணியாளர்களின் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரம் சக்கை போடு போடும். வார இறுதியில் நல்லவர்களின் அறிமுகம் கிட்டும். அவர்களுடன் நட்பு வளர்க்கலாம்.

குடும்பத்தில் சிறு குறையும் இல்லை. பிள்ளைகள் ஏற்றம் காண்பர்.

அனுகூலமான நாள்கள்: மார்ச் 15, 16

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6