அன்புள்ள கும்ப ராசிக்காரர்களே,
மாதக் கோளான சூரியன் இடம்பெயரும் அமைப்பு சிறப்பாக அமையும். புதன், சந்திரனின் அருளைப் பெறலாம். சனி, ராகு, கேது, சுக்கிரனின் ஆதரவில்லை. குருவால் நன்மை, தொல்லை இல்லை.
எதிலும் நன்கு ஆலோசித்துக் கச்சிதமான முடிவுகளை எடுப்பவர்கள் நீங்கள். தற்போது யாரை நம்புவது, யாரைப் புறக்கணிப்பது எனப் புரியாமல் தடுமாற நேரிடும். எதிரிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் நேரமிது. சற்றே அசந்தாலும் உங்களுக்குரிய ஆதாயங்களை, வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். உதவிகளை எதிர்பார்க்காமல் பொறுப்புகளை தனித்து நிறைவேற்றுவீர்கள். வருமானம் சுமார் எனலாம். சிலருக்கு செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். உடல்நலத்தைக் கவனத்தில் கொண்டு பயணங்களைத் திட்டமிடலாம். புது முயற்சிகளில் ஈடுபட இது உகந்த நேரமல்ல. சொத்துகள், மங்கலப் பேச்சுகள் தொடர்பில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பணியாளர்களுக்கு சவாலான பொறுப்புகள் காத்திருக்கும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைத் தவிர்ப்பது நல்லது. வார இறுதியில் நல்லுள்ளம் படைத்த திறமைசாலிகளின் அறிமுகம் கிட்டும். அவர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது.
குடும்ப விவகாரங்களில் வெளியாட்களுடன் பகிராமல் இருப்பது நல்லது.
அனுகூலமான நாள்கள்: ஜூலை 16, 17
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

