விஜயவாடா: ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை நிறுவியவரும் முன்னாள் முதல்வரும் நடிகருமான மறைந்த என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், என்.டி. ராமராவின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை டெல்லியில் இம்மாதம் 28ஆம் தேதி நடக்கும் விழாவில் அதிபர் திரவுபதி முர்மு வெளியிடுவார் என்று என்.டி. ராமராவின் புதல்வியான புரந்தேஸ்வரி அறிவித்தார்.
அந்த நாணயம் வெள்ளி, செப்பு, நிக்கல், துத்தநாகம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

