மனநலக் கழகத்தில் அதிக காலம்- அதாவது குறைந்தபட்சம் ஓராண்டு தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஏறக்குறைய 1,000 ஆக இருக்கிறது. அவர்களை விடுவிக்க வழியே இல்லை.
அத்தகைய நோயாளிகளுக்கு மறுவாழ்வு பயிற்சி அளித்து அவர்கள் சமூகத்தில் மீண்டும் சேர்ந்து வாழ உதவும் வகையில் கழகம் செயல்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அத்திட்டம் 140 பேருக்கு உதவி இருக்கிறது. சமூகத்தில் ஐக்கியமாகி தங்கள் வாழ்வை மறுபடியும் கட்டி எழுப்புவதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டி இருக்கிறது.
நோயாளிகள் வேலையில் சேர்ந்து சுதந்திரமாக வாழவும் அத்திட்டம் வகைசெய்கிறது.
சராசரியாக பார்க்கையில் இந்தக் கழகத்தின் 1,700 நோயாளிகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் நீண்டகால நோயாளிகள் என்று கழகத்தின் மீட்சி பராமரிப்புத் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் அலெக்ஸ் சூ கூறினார்.

