டைனோசர் எலும்பை கண்டுபிடித்த சிறுவன்

டைனோசர் எலும்பை கண்டுபிடித்த சிறுவன்

1 mins read
fa3ce366-7660-4a26-8caf-46ab84668531
-

நேதன் ரஷ்கின் (Nathan Hrushkin) என்ற 12 வயது சிறுவன் கனடாவின் அல்பர்ட்டா நிலப்பகுதியில் டைனோசரின் எலும்பைக் கண்டுபிடித்து இருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நேதன் ரஷ்கினுக்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆக மிகவும் விருப்பம். அதனால் அவன் தன் தந்தையுடன் தொல்பொருள் பாதுகாப்புப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது வாத்து போன்ற வாய்ப்பகுதி கொண்ட ஹட்ரோசர் (hadrosaur) என்ற டைனோசரின் முன்னங்கால் எலும்பைக் கண்டுபிடித்தான். அது சுமார் 69 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.