சுட்டிப் பிள்ளைகளின் வண்ணம் தீட்டும் போட்டி

சுட்டிப் பிள்ளைகளின் வண்ணம் தீட்டும் போட்டி

1 mins read
1ef9f850-8c6a-4291-9660-5b721e09664a
-

தமிழ் மொழி விழா 2020ல் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் "வண்ணத்தமிழ்" - பாலருக்கான (K1 & K2) வண்ணம் தீட்டும் போட்டி 7வது ஆண்டாக சிறப்பாக 'ஜூம்' செயலி வழியாக இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 30 மாணவர்கள் உட்பட மொத்தம் 90 பேர் கலந்து கொண்டார்கள். மாணவர்கள் வண்ணம் தீட்டும் போட்டி, கதை சொல்லும் போட்டி ஆகியவற்றுடன் தமிழ் மொழி (Kahoot) விளையாட்டுகளிலும் சிறப்பாக பங்கு பெற்று மகிழ்ந்தார்கள்.

பெற்றோருக்கும் தனியே தமிழ் மொழி (Kahoot இணையத்தளத்தில்) விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் பிள்ளைகளிடையே தமிழ் பேசும் ஆர்வத்தை அதிகரிக்கலாம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

மாணவர்களுக்குப் பிடித்த வகையில் சிறப்பான வகையில் வண்ணத்தமிழ் நிகழ்ச்சி இருந்தது என்பதை பெற்றோர்களின் கருத்துகளில் அறியமுடிகிறது.