950,000 குடும்பங்களுக்கு $135 மி. கட்டண தள்ளுபடி

950,000 குடும்பங்களுக்கு $135 மி. கட்டண தள்ளுபடி

2 mins read

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் வசிக்­கும் ஏறத்­தாழ 950,000 குடி­மக்­கள் குடும்­பங்­க­ளுக்கு அடுத்த மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை­யில் $135 மில்லி­யன் சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத் தள்­ளு­படி கிடைக்­கும்,

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான ஹெங் சுவீ கியட் இந்த ஆண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்தபோது $900 மில்­லி­யன் குடும்ப ஆத­ர­வுத் திட்­டம் பற்றி அறி­வித்­தார். அதை­யொட்டி இந்­தத் தள்­ளு­படி கொடுக்­கப்­ப­டு­கிறது.

பொரு­ளி­யல் நிச்­ச­ய­மில்­லாத நிலை­யில் இருக்கிறது. இந்நிலையில் குடும்­பங்­க­ளுக்கு கூடு­தல் ஆதரவைக் கொடுப்­பது இந்­தத் தள்­ளு­ப­டி­யின் நோக்­கம் என்று நிதி அமைச்சு நேற்று அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரர்­கள் குடும்­பச் செலவு­க­ளைச் சமா­ளிக்க குடும்ப ஆத­ர­வுத் திட்­டம் உத­வு­கிறது.

குறைந்த வரு­வாய் முதல் நடுத்­தர வரு­வாய் உள்ள குடும்­பத்­தி­னர் அதிக தள்­ளு­ப­டி­யைப் பெறு­வார்­கள். பற்­றுச்­சீட்­டும் இவற்­றில் இடம்­பெ­றும். அவற்­றைக் கொண்டு குடும்­பங்­கள் செல­வு­களை ஈடுசெய்­ய­லாம். அதே நேரத்­தில் உள்­ளூர் நிறு­வ­னங்­களுக்­கும் உத­வ­லாம்.

சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத் தள்­ளு­படி மற்­றும் ஜிஎஸ்டி வரி பற்­றுச்­சீட்­டு­களும் குடும்­பங்­க­ளுக்குக் கொடுக்­கப்­படும்.

தகு­தி­பெ­றும் குடும்­பங்­கள் தங்கள் வீடு­க­ளின் வகை­யைப் பொறுத்து இந்த நிதி ஆண்­டில் ஒன்­றரை மாதம் முதல் மூன்­றரை மாதம் வரையிலான சேவை பரா­மரிப்­புக் கட்­ட­ணத் தள்­ளு­ப­டி­யைப் பெற­லாம்.

இதைத் தெரி­விக்­கும் கடி­தங்­கள் குடும்­பங்­க­ளுக்கு ஏப்­ரல் ­முதல்­ தேதி வாக்­கில் அனுப்­பப்­படும்.

வரும் ஏப்­ரல், ஜூலை, அக்­டோ­பர், மற்­றும் 2022 ஜன­வரி ஆகிய மாதங்­களில் குடும்­பங்­க­ளுக்குக் காலாண்டு கட்­ட­ணத் தள்­ளு­படி தானா­கவே கிடைக்­கும்.

இத­னி­டையே, துணைப் பிர­த­மர் திரு ஹெங், கொவிட்-19 பல சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பாதித்­து­விட்டதாக நேற்று ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தார். குடும்ப ஆத­ர­வுத் திட்­டம் பற்றி வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் தான் அறி­வித்து இருந்­த­தை­யும் அவர் சுட்­டி­னார்.

கொவிட்-19 நெருக்­கடி காலத்­தில் எல்லா குடும்­பங்­க­ளுக்­கும் உத­வு­வ­தன் மூலம் நாம் இன்­னும் வலு­வாக மேம்­பட முடி­யும் என்­றும் திரு ஹெங் கூறி­னார்.

இந்­தத் தள்­ளு­ப­டி­க­ளுக்­குத் தாங்­கள் தகுதி பெறு­வதைக் குடும்­பங்­கள் My HDBPage தளத்­திற்­குச் சென்று தெரிந்­து­கொள்­ள­லாம். தங்­கள் நகர மன்­றத்­தை­யும் தொடர்பு­கொள்­ள­லாம்.