நெக்ஸ் ஷா திரையரங்கு மீண்டும் திறப்பு

நெக்ஸ் ஷா திரையரங்கு மீண்டும் திறப்பு

1 mins read
b1fcec26-c303-4c9a-9570-2f2d09347196
நெக்ஸ் ஷா திரையரங்கில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி காற்றை வெளியேற்றும் குழாய் விழுந்ததால் காயம் அடைந்த இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

நெக்ஸ் கடைத்­தொ­குதி கட்­டடத்­தில் செயல்­படும் ஷா திரை­ய­ரங்­கில் காற்றை வெளி­யேற்­றும் ஒரு குழாய் விழுந்­த­தில் இரண்டு பேர் காயம் அடைந்த சம்­ப­வம் ஆறு மாதங்­க­ளுக்கு முன் நிகழ்ந்­தது.

அதை­ய­டுத்து மூடப்­பட்ட அந்­தத் திரை­யரங்­கம் இப்­போது திறக்­கப்­பட்டு உள்­ளது.

திரை­ய­ரங்­கம் மார்ச் 18ஆம் தேதி செயல்படத் தொடங்­கி­ய­தாக பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.

காற்­றுக் குழாய் சம்­ப­வம் போன்று இனி வேறு விபத்து எதுவும் நிக­ழாத வகை­யில் பல பணி­க­ளை­யும் இரண்டு வாரங்கள் முன்­ன­தா­கவே நிர்­வா­கம் செய்து முடித்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். நெக்ஸ் கடைத்­தொ­குதி கட்­ட­டத்­தில் செயல்­படும் ஷா திரை­யரங்கு குழு­மத்­தில் மொத்­தம் 10 அரங்­கு­கள் உள்­ளன.

அவற்­றில் ஹால் 6 என்ற அரங்­கில் சென்ற ஆண்டு அக்­டோ­பர் 30ஆம் தேதி காற்றை வெளி­யேற்­றும் குழாய் கூரை­யில் இருந்து கீழே விழுந்­த­தில் காயம் அடைந்த இரு­வர் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டுசெல்­லப்­பட்­ட­னர்.

நெக்ஸ் கட்­ட­டத்தை நிர்­வ­கித்து வரும் கோல்ட் ரிட்ஜ் என்ற நிறு­வனம், அந்­தச் சம்­பவத்தை அடுத்து நிபு­ணத்­துவ பொறி­யாளர் ஒரு­வரை அமர்த்தி புலன் விசா­ரணை நடத்­தி­யது.