நாளை பங்குனி உத்திரம்: பக்தர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள்

நாளை பங்குனி உத்திரம்: பக்தர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள்

2 mins read

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

தமிழ் மாதங்­களில் 12வது மாத­மான பங்­கு­னி­யும் நட்­சத்­தி­ரங்­களில் 12வதாக இருக்­கும் உத்­தி­ர­மும் இணை­யும் தெய்வீகத் திரு­நாள் பங்­குனி உத்­தி­ரம்.

ஈசூ­னில் அமைந்­துள்ள புனித மரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணி­யர் கோயி­லில் நாளை ஞாயிறு அன்று நடக்­கும் பங்குனி உத்திரம் விழாவிற்கு ஆயி­ரக்­க­ணக்­கில் பக்­தர்­கள் திரள்­வர் என்­ப­தால் கோயில் நிர்­வா­கம் சில தக­வல்­க­ளைப் பக்­தர்­க­ளுக்கு வலி­யு­றுத்த விரும்­பு­கிறது.

கோயி­லுக்­குள் நுழை­யும் அனைத்து பக்­தர்­களும் முன்­ப­திவு செய்­து­கொள்ள வேண்­டும். கோயி­லின் இணை­யப் பக்­கத்­தில் பதி­வு­செய்­து­கொள்­ள­லாம்.

பங்­குனி உத்­தி­ரம் திரு­நா­ளில் நள்­ளி­ரவு 12 மணி முதல் காலை 8.30 மணி வரை பால்­கு­டங்­கள் அனு­ம­திக்­கப்­படும்.

கோயில் முன்­கூட்­டியே தயார்­செய்து வைத்­தி­ருக்­கும் பால்­கு­டங்­களை மட்­டுமே பக்­தர்­கள் நேர்த்­திக்­க­ட­னுக்­குப் பயன்­ப­டுத்­த­லாம். பால்­கு­டம் காணிக்கை செலுத்­து­வோ­ருக்­குத் துணை­யாக ஒரு­வர் மட்­டுமே செல்ல முடி­யும்.

பால்­கு­டம் எடுக்­காத பொது­மக்­கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழி­பாட்­டுக்­காக கோயி­லுக்குச் செல்­ல­லாம்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இணங்க, காவ­டி­களும் அல­குக் காவ­டி­களும் கோயி­லுக்­குள் செல்ல இந்த ஆண்டில் அனு­மதி கிடை­யாது.

திறன்­பேசி இல்­லா­த­வர்­கள் மறக்­கா­மல் தங்­க­ளது அடை­யாள அட்­டையை எடுத்து வர வேண்­டும் என்று அக்­கோ­யி­லின் செய­லா­ளர் திரு அ.அண்­ணா­துரை தெரி­வித்­தார். இன்று (27ஆம் தேதி) சனிக்­கிழமை இரவு 7 மணி­யில் இருந்து நாளை இரவு 11.59 மணி வரை ஈசூன் தொழிற்­பூங்கா 'ஏ'யின் ஒரு பகுதி வாக­னப் போக்­கு­வ­ரத்­திற்கு மூடப்­படும்.

வாக­ன­ ஓட்டிகளுக்கு உத­வ­வும் வழி­காட்­ட­வும் அப்­ப­கு­தி­யில் பாது­கா­வல் அதி­கா­ரி­கள் பணி­ய­மர்த்­தப்­பட்­டு இருப்­பர்.

"ஏற்­கெ­னவே இணை­யத்­தில் முன்­ப­திவு செய்­து­கொண்­ட­வர்­கள் பதிவு செய்த நேரத்­திற்­குள் வரும்­படி கேட்­டுக்­கொள்­கி­றோம். அனை­ வ­ரும் சுமூ­க­மாக கோயி­லுக்­குள் சென்று வழி­பாட்­டில் ஈடு­பட இது வழி­வ­குக்­கும்," என்று வலி­யு­றுத்­தி­னார் திரு அண்­ணா­துரை.

வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு குடை­க­ளை­எடுத்து வரு­மா­றும் பக்­தர்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

கோயிலை விட்டு பக்­தர்­கள் வெளி­யா­கும்­போது பிர­சாத பொட்­ட­லங்­கள் வழங்­கப்­படும்.

மேல் விவ­ரங்­க­ளுக்கு, https://www.htsbt.org.sg/ என்ற கோயி­லின் இணை­யப் பக்­கம் அல்­லது அதன் ஃபேஸ்புக் பக்­கத்­திற்­குச் செல்­ல­லாம்.