அந்திமகால சிகிச்சை: பெரும்பாலான சுகாதார துறை பட்டத்தொழிலர்கள் ஆயத்தமாக இல்லை

அந்திமகால சிகிச்சை: பெரும்பாலான சுகாதார துறை பட்டத்தொழிலர்கள் ஆயத்தமாக இல்லை

2 mins read
05012b07-4d75-46fb-a87b-fb64c55e3eb7
இடமிருந்து சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் சிந்தியா கோ, அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து விருது பெறுகிறார். மன்றத்தின் கவுரவ செயலாளர் டாக்டர் வூ ஹுவெய் யாவ் உடன் இருக்கிறார். படம்: சிங்கப்பூர் ஹாஸ்பிஸ் மன்றம் -

உயி­ருக்குப் போரா­டும் நோயா­ளி­களுக்கு அந்­தி­மகால சிகிச்­சை­களை வழங்க தாங்­கள் ஆயத்த மாக இல்லை என்று இங்கு பெரும்­பா­லான சுகா­தா­ரப் பரா­மரிப்பு பட்­டத்­தொ­ழி­லர்­கள் கரு­து­கி­றார்­கள்.

ஓர் ஆய்வு இவ்­வாறு தெரி­விக்­கிறது. இருந்­தா­லும் அத்­தகைய சேவைத் துறை­யின் முக்­கி­யத்­து­வத்தை அவர்­கள் புரிந்து­கொண்டு இருக்­கி­றார்­கள்.

சிங்­கப்­பூர் ஹாஸ்­பிஸ் மன்றம் என்ற அமைப்பு 2,327 சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை பட்­டத்­தொ­ழி­லர்­களை உள்­ள­டக்கி ஆய்வு ஒன்றை இணை­யம் வழி ஆகஸ்ட் மாதத்­திற்­கும் அக்­டோ­பர் மாதத்­திற்­கும் இடை­யில் நடத்­தி­யது.

அந்த ஆய்வு முடி­வு­கள் நேற்று நடந்த இந்த மன்­றத்­தின் 25வது ஆண்டு விழா விருது வழங்­கும் நிகழ்ச்­சி­யில் வெளி­யி­டப்­பட்­டன.

மருத்­துவப் பள்­ளி­யில் அல்­லது தாதிமைப் பள்­ளி­யில் அல்­லது சமூ­கப் பணி­களைப் பற்றி படிக்கை­யில் 10 பேரில் ஏறத்­தாழ நான்கு பேர் மட்­டுமே அந்­தி­மகால சிகிச்சை பற்றிய பயிற்­சி­யைத் தாங்­கள் பெற்­ற­தாக அந்த ஆய்­வில் தெரி­வித்­துள்­ள­னர்.

அத்­த­கைய பயிற்­சி­யைப் பெற்­ற­வர்­களில் 58 விழுக்­காட்டு மருத்­து­வர்­கள், 45 விழுக்­காட்டு தாதி­யர்­கள், 60 விழுக்­காட்டு உதவி சுகா­தா­ரப் பட்­டத்­தொ­ழி­லர்­கள் தாங்­கள் முற்­றி­விட்ட நோயா­ளி­களுக்கு ஆத­ரவு தரும் சிகிச்­சை­களை வழங்க போதிய அள­வுக்கு ஆயத்­த­மாக இல்லை என்று கருது­கி­றார்­கள்.

இத­னி­டையே, இந்த மன்­றத்­திற்குத் தலைமை வகிக்­கும் டாக்­டர் பேட்­ரி­ஷியா நியோ, சிங்­கப்­பூரை பொறுத்தவரை­ அந்­தி­மகால சிகிச்­சைத் துறை முழு வளர்ச்சி பெறாத ஒரு துறை என்று கூறி­னார்.

2006ஆம் ஆண்டு வரை அது ஒரு மருத்துவ துணைப் பிரிவாக தோற்றுவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.