கொவிட்-19: புதிதாக ஒருவருக்குச் சமூகத்தொற்று

கொவிட்-19: புதிதாக ஒருவருக்குச் சமூகத்தொற்று

2 mins read

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­க­ளை­யும் சேர்த்து கொவிட்-19 தொற்­றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை 60,265 ஆகி­யது.

அந்த 12 பேரில் சமூ­கத் தொற்­றுக்கு ஆளான ஒரு­வ­ரும் அடங்கு­வார் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

மார்ச் 12ஆம் தேதிக்­குப் பிறகு நேற்­று­தான் முதன்­மு­த­லாக ஒரு­வ­ருக்­குச் சமூகத்தொற்று ஏற்­பட்­டுள்­ளது. மற்ற 11 பேரும் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள்.

தனி­மை­யில் இருக்­கும்­படி எல்­லா­ருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்கு விடு­தி­களில் யாருக்­கும் நேற்று தொற்று இல்லை. சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்றி இருந்த ஒரே ஒரு கடைசி குழு­ம­மும் கிருமி இல்­லாத நிலைக்­குத் திரும்­பி­யது.

ஆகை­யால் இப்­போது கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் என்று எது­வும் இல்லை என்று அமைச்சு வியா­ழக்­கி­ழமை தெரி­வித்­தது.

இத­னி­டையே, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மாண­வர் தங்­கும் விடு­தி­யைச் சேர்ந்த 438 பேருக்­கும் தொற்று இல்லை என்­பது பரி­சோ­தனை மூலம் தெரி­ய­வந்­த­தா­க­வும் சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

வியா­ழக்­கி­ழமை புதி­தாக 17 பேருக்கு கிருமி தொற்றி இருந்­தது. அனை­வ­ருமே வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். தனி­மை­யில் இருக்க வேண்­டும் என்று எல்­லா­ருக்­கும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

வியா­ழக்­கி­ழமை எட்டு பேர் குண­ம­டைந்­த­னர். அவர்­க­ளை­யும் சேர்த்து மொத்­தம் 60,071 பேர் முற்­றி­லும் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள்.

25 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிக்சை பெற்று வரு­கி­றார்­கள். யாரும் தீவிர கண்­கா­ணிப்­பில் இல்லை.

112 பேர் சமூக நல்­வாழ்வு நிலை­யங்­களில் குண­ம­டைந்து வரு­கி­றார்­கள். கொவிட்-19 கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் 30 பேர் மாண்டு ­விட்­ட­னர்.