ஆசியான் பொருளியல் சமூக துணை தலைமைச் செயலாளர்

ஆசியான் பொருளியல் சமூக துணை தலைமைச் செயலாளர்

1 mins read

சிங்­கப்­பூ­ரின் மூத்த அர­சாங்­கச் சேவை அதி­கா­ரி­யான சத்­விந்­தர் சிங் ஆசி­யான் பொரு­ளி­யல் சமூ­கத்­தின் அடுத்த துணைத் தலை­மைச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டு இருக்­கி­றார்.

ஆசி­யான் பொரு­ளி­யல் சமூக அமைப்பு, ஆசி­யான் செய­ல­கத்­தின் கீழ் செயல்­ப­டு­கிறது. திரு சத்­விந்­தர் சிங், அந்­தப் பொறுப்பை நேற்று முதல் மூன்­றாண்டு காலத்­திற்கு ஏற்­றுக்­கொண்டு இருப்­பதாக வர்த்­தக, தொழில் அமைச்சு நேற்று அறி­வித்­தது.

திரு சத்­விந்­தர் சிங், என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பின் உதவி தலைமை நிர்­வாக அதி­காரி பத­வியைக் கைவிட்டுள்ளார்.

பிலிப்­பீன்சை சேர்ந்த டாக்­டர் அலா­டின் டி. ரில்­லோ­வுக்குப் பதி­லாக புதிய பொறுப்பை மேற்­கொள்­ளும் திரு சிங், ஆசி­யான் பொரு­ளி­யல் சமூ­கத்­தின் வழி­காட்­டித் திட்­டம் 2025ஐ நடை­மு­றைப்­ப­டுத்த ஆசி­யான் தலை­மைச் செய­லா­ள­ருக்கு உத­வு­வார்.

அதோடு, அந்­தச் சமூ­கத்­தின் இலக்­கு­கள் நிறை­வே­ற­வும் திரு சிங் சேவை­யாற்­று­வார் என்று தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

ஆசி­யான் செய­ல­கத்­தில் இருக்­கும் ஆசி­யான் பொரு­ளி­யல் சமூ­கத் துறை­யின் இயக்­கு­ந­ர­கங்­களை­யும் இதர பல பிரி­வு­க­ளை­யும் திரு சிங் மேற்­பார்­வை­யி­டு­வார்.

ஆசி­யான் உறுப்பு நாடு­கள், பேச்­சு­வார்த்தைப் பங்­காளி நாடு­கள், அனைத்­து­லக அமைப்­பு­கள் ஆகி­ய­வற்­று­ட­னான உற­வு­கள், கொள்­கை­கள், பொரு­ளி­யல் விவ­கா­ரங்­களில் ஒத்­து­ழைப்பு மேம்­பா­டு­களை திரு சிங் நிர்­வ­கிப்­பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.