தெமாசெக் கருத்து: முக்கிய இடத்தைப் பிடிக்கும் சமூக, சுற்றுச்சூழல் முதலீடுகள்

தெமாசெக் கருத்து: முக்கிய இடத்தைப் பிடிக்கும் சமூக, சுற்றுச்சூழல் முதலீடுகள்

2 mins read

கொவிட்-19 கார­ண­மாக சமூ­கத்­தில் ஏற்­றத்­தாழ்­வு­கள் அதிக­மாகி இருக்­கின்­றன. இதன் கார­ண­மாக லாப­க­ர­மான சமூக, சுற்­றுச்சூ­ழல் முத­லீ­டு­க­ளுக்­கான தேவை கூடி இருக்­கிறது என்று சிங்­கப்­பூ­ரின் தெமா­செக் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் நம்­பு­கிறது.

சமூ­கத்­தி­லும் சுற்­றுப்­பு­றத்­தி­லும் சாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் அதே வேளை­யில், லாபத்தை யும் ஈட்­டித் தரக்­கூ­டிய அத்­த­கைய முத­லீ­டு­கள் 2019ல் $715 பில்­லி­யனாக உயர்ந்­தன.

அவை, அதற்கு முந்­தைய ஆண்­டில் $502 மில்­லி­ய­னாக இருந்­தன.

உல­க­ளா­விய லாப­க­ர­மான சமூக, சுற்­றுச்­சூ­ழல் முத­லீ­டு­கள் கட்­ட­மைப்பு என்ற ஓர் அமைப்பு நடத்­திய ஆய்வு மூலம் இந்த நில­வரங்­கள் தெரி­ய­ வ­ரு­கி­ன்றன.

அர­சாங்க முதலீடு நிறு­வ­னங்­களில் ஒன்­றான தெமா­செக், ஆசி­யா­வி­லும் ஆப்­பி­ரிக்­கா­வி­லும் ஒருமித்­த­ க­வ­னம் செலுத்­தும் 'லீஃப்பிராக் இன்­வெஸ்ட்மெண்ட்' என்ற நிறு­வ­னத்­திற்கு $500 மில்லி யன் ஒதுக்­கீட்டை அறி­வித்­துள்­ளது.

இத்­த­கைய முத­லீ­டு­களை நிர்­வகிக்­கும் ஒரு நிறு­வ­னத்­துக்கு ஒதுக்­கப்­பட்டு உள்ள தொகை­யில் தனித்த ஆகப்­பெ­ரிய தொகை இது­தான் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"வளர்ச்­சி­யைத் தூண்­டி­வி­டும் ஊக்­கி­யாக இருப்­பதே நமது இலட்­சி­யம்," என்று இந்த நிறுவனத்­தின் இத்­த­கைய முத­லீட்­டுத் துறைத் தலை­வரான பனோய்ட் வேலன்­டின் ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார். லீஃப்பி­ராக் இன்­வெஸ்ட்­மெண்ட் நிறு­வ­னம், வள­ரும் நாடு­களில் நிதிச் சேவை­க­ளி­லும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு துறை­க­ளி­லும் முத­லீடு செய்­யும் நிறு­வ­னம் ஆகும்.

இத்­த­கைய முத­லீ­டு­க­ளுக்­காக 'ஏபிசி வோர்ல்ட் ஆசியா' என்ற ஒரு தனி­யார் பங்­கு­மு­தல் நிதியை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன் தெமா­செக் அமைத்­தது.

லீஃப்பி­ராக் இன்­வெஸ்ட்­மெண்ட் நிறு­வ­னத்­தில் பங்கு வாங்க திட்­ட­மி­டும் தெமா­செக், தன­து செல்­வாக்கைப் பெருக்­கும் வகை­யில் இதர நிதி முத­லீட்டு நிறு­வ­னங்­களி­லும் பணம்­போ­டுவது பற்றி பேச்சு நடத்தி வரு­கிறது.

அவற்­றில் ஒரு நிறு­வ­னம் இந்­தியா மீது ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும் என்று வேலன்­டின் குறிப்­பிட்­டார்.