உடன்பிறப்புகளின் மசாலா கைவண்ணம்

உடன்பிறப்புகளின் மசாலா கைவண்ணம்

3 mins read
a512c9a2-08d3-46c6-bcc4-06ff0fcd1c6a
ஜவஹரி, கீர்த்தனா, லாவண்யா ஆகிய சகோதர சகோதரிகள், தங்களின் 'ஸ்பைஸ் கல்ச்சர்' வியாபாரத்தை கொவிட்-19 கிருமி காலத்தில் தொடங்கினர். படம்: ஜெ.கீர்த்தனா -

இந்து இளங்­கோ­வன்

கொவிட்-19 கிரு­மித்­தொற்று அனை­வ­ரை­யும் வீட்­டி­லேயே முடக்கி வைத்­த­போ­தும், காலம் கடத்­தா­மல் மூன்று சகோ­த­ரர்­கள் வீட்­டி­லி­ருந்தே இணை­யம் வழி­யான மசாலா தூள் வியா­பா­ரத்தை தொடங்­கி­விட்­ட­னர்.

ருசி­யான, ஆரோக்­கி­ய­மான உண­வுக்­குத் தர­மான மசாலா தூள் கலவை அவ­சி­யம் எனத் தன் பாட்டி தன்­னு­டைய தாயா­ரி­டம் அடிக்­கடி கூறு­வார் என்று நினை­வு­கூர்ந்­தார் 20 வயது கீர்த்­தனா ஜெய்­காந்த். தன்­னு­டைய தம்பி ஜவ­ஹரி ஜெய்­காந்த் (17), தங்கை லாவண்யா ஜெய்­காந்த் (15) ஆகி­யோ­ரு­டன் இனைந்து 'ஸ்பைஸ் கல்ச்­சர்' என்ற இணைய வர்த்­த­கத்தை கீர்த்­தனா நடத்­தி ­வ­ரு­கி­றார்.

"எங்­கள் அம்மா எப்­போ­தும் தாமே தயா­ரித்த மசாலா பொருட்­க­ளைக் கொண்டு எங்­க­ளுக்­குப் பல­வி­த­மான கறி வகை­க­ளைச் சமைத்­துத் தரு­வார். வீட்­டி­லேயே இந்த மசாலா கல­வை­க­ளைத் தயார் செய்­யும் முறையை அவர் எங்­கள் பாட்­டி­யி­ட­மி­ருந்து கற்­றுக்­கொண்­டார்.

"சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் பெறு­வ­தற்கு முன்பே சிறந்த மசாலா கல­வை­க­ளைத் தயா­ரிக்­கத் தேவைப்­படும் தர­மான பொருட்­களை வாங்க செம்­ப­வாங்­கி­லி­ருந்து சிராங்­கூன் சாலைக்­குச் சென்­ற­தாக அடிக்­கடி கூறு­வார்," என்­றார் கீர்த்­தனா.

கீர்த்­தனா, சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தின் இரண்­டாம் ஆண்டு மாண­வர். ஜவ­ஹரி தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யி­லும் லாவண்யா சிங்­கப்­பூர் ஸ்போர்ட்ஸ் பள்­ளி­யி­லும் பயின்று வரு­கின்­ற­னர்.

பள்ளி வேலை­க­ளுக்­கி­டையே வார­இ­றுதி நாட்­களில் இவர்­கள் ஒன்­று­கூடி வியா­பா­ரத்­திற்­கான பணி­களில் தீவி­ர­மாக இறங்­கி­டு­வர். இதை ஒரு வியா­பா­ரம் என்று மட்­டும் கரு­தா­மல் தம்பி தங்­கை­யு­டன் நெருக்­க­மான பிணைப்பை ஏற்­ப­டுத்­தும் ஒரு நல்ல வாய்ப்­பாக இதைக் கரு­து­வ­தாக கூறி­னார் கீர்த்­தனா.

"சென்ற ஆண்டு கிரு­மித்­தொற்று அதி­க­மாக இருந்த காலத்­தில் நாங்­கள் வீட்­டி­லேயே இருக்க வேண்­டிய சூழ்­நிலை இருந்­தது. ஆனா­லும், எங்­கள் தாயார் வேலை கார­ண­மாக அலு­வ­ல­கத்­திற்­குச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது.

அத­னால் எங்­க­ளின் மதிய உணவை நாங்­களே தயார் செய்­து­கொள்­ள­லாம் என்று முடிவு செய்­தோம். கறி சமைப்­ப­தற்­குத் தேவை­யான மசாலா கல­வையை முன்பே தயார்­செய்து வைத்­து­விட்டு வேலைக்­குச் செல்­லு­மாறு அம்­மா­வி­டம் கேட்­டுக்­கொண்­டோம்," என்­றார்.

அம்மா செய்து வைத்த மசாலா கல­வை­யைக் கொண்டு உணவை எளி­தா­க­வும் விரை­வா­க­வும் சமைக்க முடி­வதை கீர்த்­தனா உணர்ந்­தார்.

தன்­னைப் போல் வீட்­டி­லேயே எளிய முறை­யில் கறி சமைக்க விரும்­பு­வோர், தங்­க­ளின் மசாலா கல­வையை வாங்­க­லாம் என்­றெண்ணி சகோ­த­ரர்­க­ளு­டன் வியா­பா­ரத்­தைத் தொடங்­கி­னார்.

"சமை­யலை முடிந்­த­வரை எளி­தா­கச் செய்­வதே எங்­கள் இலக்­காக இருந்­தது. அத­னால் ​​நாங்­கள் பல படி­க­ளைக் குறைத்து மிக சுல­ப­மான சமை­யல் தயா­ரிப்பு முறையை நாடி­னோம். முன்பே தயா­ரிக்­கப்­பட்ட மசாலா கலவை என்­றா­லும் சுவை­யும் ஆரோக்­கி­ய­மும் குறைந்­து­வி­ட­வில்லை.

"எங்­கள் மசாலா கல­வையை '3 in 1' திடீர் காபி போல் நினைத்­துப் பாருங்­கள். விருப்­ப­மான இறைச்சி அல்­லது காய்­க­றி­கள், ஒரு வெங்­கா­யம், ஒரு தக்­காளி ஆகி­ய­வற்­று­டன் எங்­க­ளது மசாலா கலவை. இவற்­றைக் கொண்டு சமை­யல் தெரி­யா­தோர் கூட ருசி­யான கறி சமைத்­து­வி­ட­லாம்," என்­றார் கீர்த்­தனா.

இளை­யர்­க­ளைக் கவ­ரும் புது­மை­யான மாம்­பழ இறால் கறி மசாலா கலவை, மசாலா டீ கலவை போன்­ற­வற்­றை­யும் 'ஸ்பைஸ் கல்ச்­சர்' விற்­பனை செய்­து­வ­ரு­கிறது.