1. பெட்டியை திறந்தால் பூட்ட முடியாது?
2. யாரும் செய்யாத கதவு, தானே திறக்கும், தானே மூடும். அது என்ன?
3. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?
4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான். அவன் யார்?
5. சட்டையைக் கழற்றினால் சத்துணவு. அது என்ன?
6. வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை. அது என்ன?
7. பற்கள் இருக்கும்; ஆனால் கடிக்க மாட்டான்.
8. வளைந்து நெளிந்து ஆடும், தண்ணீர் குடித்தால் சாகும். அது என்ன?
9. கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர். அது என்ன?
10. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அது என்ன?
ஸ்ரீவிகாஷ்
தொடக்கநிலை 5,
புக்கிட் வியூ
தொடக்கப்பள்ளி

