பாட்டுக்கு வேந்தர் பாரதி

பாட்டுக்கு வேந்தர் பாரதி

1 mins read
bfc0f7aa-2408-4618-b31e-d99e3cbb931a
-

ஒருநாள் பாட்டுக்கு வேந்தர் பாரதியார் எட்டையபுரம் அரசரைப் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது கவிஞருக்குரிய அரியாசனம் கொடுக்கத் தவறினார் அரசர். அதனால் பாரதியார் கோபப்படவில்லை. கூனிக் குறுகவும் இல்லை.

அரசரைப் பார்த்து, "நீங்கள் ஊருக்கு வேந்தர். நானோ பாட்டுக்கு வேந்தர். நமக்குள் உயர்வு தாழ்வுக்கு இடமேது?" என்று நயம்படக் கூறி அரசருக்கு இணையான ஓர் ஆசனத்தில் அமர்ந்தார் பாரதியார்.