வெளிநாட்டுப் பயணங்கள்: நோய் அபாய அணுகுமுறை

1 mins read

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோ­ரின் எண்­ணிக்கை அதி­கரித்தபோதும், வரும் மாதங்­களில் பய­ணங்­களை மேற்­கொள்ள சிங்கப்

பூரர்களை அனு­ம­திப்­ப­தில் நோய் அபாய அடிப்­ப­டை­யி­லான அணு­கு­மு­றையே கடைப்­பி­டிக்­கப்­படும்.

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் இவ்­வாறு தெரி­வித்­தார்.

இதன்­படி, பாது­காப்­பா­னவை என்று வகைப்­ப­டுத்­தப்­படும் நாடு­க­ளி­லி­ருந்து வரு­வோர், அவர்­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளாக இருந்­தா­லும் சரி, பய­ணி­க­ளாக இருந்­தா­லும் சரி, சிங்­கப்­பூ­ரில் வந்­தி­றங்­கி­ய­தும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட மாட்­டார்­கள்.

ஆனால், இதற்கு மாறாக, பாது­காப்­பற்­றவை என்று வகைப்­ப­டுத்­தப்­படும் நாடு­க­ளி­லி­ருந்து வரு­வோர் குறிப்­பிட்ட தங்­கு­வி­டு­தி­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

இதை நேற்று தமது மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் மாநாட்­டில் தெரி­வித்த நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங், கொவிட்-19 கொள்ளைநோய் வந்­த­தி­லி­ருந்து இதுவே அர­சின் அணுகு­மு­றை­யாக இருந்­ததை சுட்­டி­னார்.

இதற்கு வெவ்­வேறு நாடு­ களுக்கு எதி­ராக எடுக்­கப்­பட்­டுள்ள வெவ்­வேறு நட­வ­டிக்­கை­களே சான்று என்­றும் அவர் கூறினார்.