'உணவு போதிய இருப்பு உள்ளது'

'உணவு போதிய இருப்பு உள்ளது'

1 mins read

சிங்­கப்­பூ­ரில் போது­மான அளவு உணவு, அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் உள்­ளன. எனவே, தேவை­யா­ன­வற்றை மட்­டும் வாங்க வேண்­டும் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கூறி­யுள்­ளார்.

இதன் தொடர்­பில் நேற்று நடை­பெற்ற மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் பேசிய அவர், சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே அத்­தி­யா­வ­சி­யப் பொருட்களில் விநி­யோ­கம் தொடர்­வதை உறு­தி­செய்ய மலே­சி­யா­வு­டன் சிங்­கப்­பூர் பணி­யாற்றி வரு­வ­தாக கூறினார்.

மலே­சி­யா­வில் இன்று முதல் இரு வாரங்­க­ளுக்கு முழு முடக்­க­நிலை நடப்பில் இருக்கும்.

கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்கு இணைத் தலை­வ­ரான திரு கான், சிங்­கப்­பூ­ரி­டம் இருப்­பில் இருக்­கும் பொருள்­களை அதி­க­ரிக்­க­வும் உணவு, அத்­தி­யா­வ­சியப் பொருள்­களை பல்­வ­கைப்­ப­டுத்­த­வும், அதே வேளை­யில் உள்­ளூர் தயா­ரிப்பை அதி­க­ரிக்­க­வும் சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­களோடும் நிறு­வ­னங்­க­ளு­டன் சேர்ந்து அர­சாங்­கம் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தா­கச் சொன்னார்.

இதன் தொடர்­பில் அத்­தி­யா­வ­சியப் பொருள், சேவை­க­ளைக் கையா­ளும் நிறு­வ­னங்­க­ளு­டன் சேர்ந்து பொரு­ளி­யல் அமைப்­பு­கள் பணி­யாற்றி வரு­வ­தா­க­வும் திரு கான் கூறி­னார்.

"உல­க­ள­வில் கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வி­வ­ரும் சூழ­லில், ஒரு தேச­மாக நாம் தொடர்ந்து தயார்­நி­லை­யி­லும் விழிப்­பு­ட­னும் இருக்க வேண்­டும். அதே வேளை­யில், நீக்­குப்­போக்­கு­ட­னும் சூழ்­நி­லைக்கு ஏற்­ற­வாறும் நாம் செயல்­ப­ட­வும் வேண்­டும்," என்றார் அவர்.

இந்­நி­லை­யில், தற்­போது நடை­மு­றை­யில் இருக்­கும் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மீது மித­மான தாக்­கம் ஏற்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக திரு கான் கூறினார்.

ஒவ்­வொரு துறைக்கும் பாதிப்பு வேறு­படும் என்­றார் அவர்.