ஈசூன் புளோக்கில் கிருமி சோதனை

ஈசூன் புளோக்கில் கிருமி சோதனை

1 mins read

ஈசூ­னில் உள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக் ஒன்­றில் வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் அனை­வ­ரும் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

அந்த புளோக்­கில் ஒரு சில­ருக்­குத் தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

இதன் தொடர்­பில் அந்த புளோக்­ குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு அனுப்­பப்­பட்ட கடி­தத்­தில், புளோக் 745 யீசூன் ஸ்தி­ரீட் 72ல் வசிப்­ப­வர்­க­ளின் பாது­காப்­பை­யும் நல­னை­யும் கருதி முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக இந்த ஏற்­பாடு செய்­யப்­ப­டு­வ­தாக நீ சூன் குழுத்­தொ­கு­திக்­கான அடித்­தள ஆலோ­ச­கர் முகம்­மது ஃபைஷால் இப்­ரா­கிம் தெரி­வித்­தார்.

புளோக் 745க்கு அக்­கம்­பக்க புளோக்­கு­களில் வசிப்­போர் கொவிட்-19 பரி­சோ­தனை செய்து ­கொள்ள அவ­சி­ய­மில்லை என்­றார் அவர்.

மே 15 முதல் மே 24ஆம் தேதி வரை புளோக் 745ல் வசிக்­கும் குடும்­பங்­க­ளைப் பார்க்க சென்­ற­வர்­கள் மட்­டும் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

"புளோக் 745ல் உள்ள பொது­வான பகு­தி­களை நீ சூன் நகர மன்­றம் முழு­மை­யாக சுத்­தப்­ப­டுத்தி ­யுள்­ளது," என்று டாக்­டர் ஃபைஷால் தெரி­வித்­தார்.