உயிரியல் மருத்துவ முன்னேற்றம் மக்களுக்கு பலன் தர வேண்டும்

உயிரியல் மருத்துவ முன்னேற்றம் மக்களுக்கு பலன் தர வேண்டும்

2 mins read

அறி­வி­யல், தொழில்­நுட்­பத்­தில் முன்­ன­ணி­யில் திகழ சிங்­கப்­பூர் பல முயற்­சி­களை முடுக்­கி­விட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், உயி­ரி­யல் மருத்­து­வத் துறை­யில் காணும் முன்­னேற்­றங்­கள் தன் மக்­க­ளுக்­குப் பலன் அளிக்­கின்­றன என்­பதை நாடு உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வலி­யு­றுத்­திக் கூறி இருக்­கி­றார்.

அதோடு, அந்த முன்­னேற்­றங்­கள் நாட்­டின் நெறி­முறை நிலைப்­பாட்டை மீறா­மல் அவற்றை ஒட்­டியே இடம்­பெ­று­கின்­றன என்­ப­தை­யும் சிங்­கப்­பூர் உறு­தி­செய்ய வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

'உயி­ரி­யல் நெறி­மு­றை­கள் ஆலோ­ச­னைக் குழு'வின் 20வது ஆண்­டு­வி­ழா­வைக் குறிக்­கும் வகை­யில் நேற்று நடந்த மெய்­நி­கர் பொது மாநாடு ஒன்­றில் திரு ஹெங் பேசி­னார்.

அறி­வி­யல் ஆய்­வு­களில் சிங்­கப்­பூர் அதி­க­மான முத­லீ­டு­க­ளைச் செய்து வரு­கிறது என்­றும் இவற்­றால் ஏற்­பட்ட பலனை கொவிட்-19 தொற்­றின்­போது காண முடிந்­தது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 காலத்­தி­லும் உயி­ரி­யல் மருத்­து­வத் துறை தொடர்ந்து முத­லீ­டு­களை ஈர்த்­து­வ­ரு­வ­தாக அவர் கூறி­னார். 'ஃபசர்-பயோ­என்­டெக்' தடுப்­பூசி உரு­வாக்­கத்­திற்­குப் பங்­காற்­றி­யுள்ள பயோ­என்­டெக் நிறு­வ­னம், சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி தயா­ரிப்பு ஆலை ஒன்றை அமைப்­பதை அவர் சுட்­டி­னார்.

மனித உடல்­ந­லம் மற்­றும் ஆற்­றல் தொடர்­பி­லான துரித வளர்ச்சி, மேலும் புதிய நெறி­முறை எல்­லை­களுக்கு வழி கோலு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"உயி­ரி­யல் தொழில்­நுட்­பத் துறை­யில் செயற்கை நுண்­ண­றி­வுப் பயன்­பாடு கார­ண­மாக விஞ்­ஞானி­களால் ஒரு நாள், மனி­தச் சிந்­தனை, உணர்ச்­சி­கள், நடத்தை ஆகி­ய­வற்­றில் தாக்­கத்தை ஏற்­படுத்­தக்­கூ­டும்.

"ஆகை­யால் இத்­த­கைய அக்­கறைக்­கு­ரிய விவ­கா­ரங்­களை உரிய அம்­சங்­களில் காலக்­கி­ரம முறைப்­படி நாம் கவ­னம் செலுத்தி வர­வேண்­டும்," என்று திரு ஹெங் கூறி­னார்.

புத்­தாக்­கத்­தின் எல்­லை­கள் விரி­வ­டை­யும் சூழ­லில் தக­வல் ரக­சிய காப்­புத்­தன்மை, தனி உரிமை, பாது­காப்பு ஆகி­யவை நிலை­நாட்டி வரப்­ப­டு­கின்­றன என்­பதை உறுதிப்­படுத்­து­வ­தில் சிங்­கப்­பூர் ஏற்­கெனவே அக்­கறை காட்டி வரு­வதை துணைப் பிர­த­மர் சுட்­டி­னார்.

ஆய்வு, புத்­தாக்­கம் இரண்­டின் தொடர்­பி­லும் மனி­தனை மைய­மாகக் கொண்ட அணு­கு­மு­றையை அதி­கம் கையாள வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்தை சிங்­கப்­பூர் அங்கீ­க­ரப்­ப­தா­க­வும் துணைப் பிர­த­மர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் கடந்த 20 ஆண்­டு­களில் உயி­ரி­யல் மருத்­து­வத் துறை பெரும் முன்­னேற்­றம் கண்டு வந்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட திரு ஹெங், இந்த அறி­வி­யல் துறை முன்­னே­று­வ­தற்கு உயி­ரி­யல் முன்­னேற்­றங்­கள் தொடர்­பான நெறி­முறை­கள் இன்­னும் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன என்­றார்.