'தேசிய பள்ளி விளையாட்டுகள் ரத்தானது ஒரு பின்னடைவே'

'தேசிய பள்ளி விளையாட்டுகள் ரத்தானது ஒரு பின்னடைவே'

1 mins read

இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூரில் தேசிய பள்ளி விளையாட்டுகள் (என்எஸ்ஜி) ரத்து செய்யப்பட்டன. மாணவ விளையாட்டு வீரர்கள் இதனால் வருத்தப்படுவதுடன் உற்சாகம் இழந்த நிலையில் உள்ளனர். இவ்வாறு மீண்டும் விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டது, இளையர் வளர்ச்சிக்கு ஒரு பின்னடைவு என தேசிய விளையாட்டு மன்றங்களும் பயிற்றுவிப்பாளர்களும் கூறுகின்றனர். பயிற்சியின்போது கற்றுக்கொண்டதை இத்தகைய போட்டிகளில்தான் வெளிப்படுத்தி, அதிலிருந்து கற்றுக்கொண்டு வளர்ச்சி காண முடியும் என்ற நிலையை இது தடுப்பதாக கூறப்பட்டது.