கல்வி அமைச்சு: சிங்கப்பூர் பள்ளிகளில் இனவாதத்திற்கு இடமில்லை

கல்வி அமைச்சு: சிங்கப்பூர் பள்ளிகளில் இனவாதத்திற்கு இடமில்லை

2 mins read

பள்­ளிச்­சூ­ழ­லில் மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் இன­வா­தத்­திற்கு ஆளா­னால் அது தொடர்­பில் விசா­ரணை நடத்த உடனே தங்க­ளின் பள்­ளிக்­குத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும். இத்­த­கைய இன­வா­தச் செயல்­களில் ஈடு­ப­டு­வோர், ஆலோ­சனை பெற அனுப்­பப்­ப­டு­வ­து­டன் அவர்­கள் மீது ஒழுங்­கு­ந­ட­வடிக்கை எடுக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அண்மை கால­மாக 'இன்ஸ்­ட­கி­ராம்', 'ஃபேஸ்புக்' போன்ற சமூக ஊட­கத் தளங்­களில் இன­வா­தம் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­கள் எழுந்து வரு­கின்­றன. பொதுப் பள்ளி­களில் இன­வா­தத்­திற்கு ஆளா­ன­தாக சிறு­பான்மை இனத்­த­வர்­கள் தங்­க­ளுக்கு நேர்ந்த சம்­ப­வங்­க­ளைக் கூறி வரு­கின்­ற­னர்.

தங்­க­ளின் முன்­னாள் வகுப்பு நண்­பர்­கள் இனம் சார்ந்த துன்­புறுத்­த­லில் ஈடு­பட்­டது, ஆசி­ரி­யர்­கள் பாகு­பாடு காட்­டி­யது போன்­ற­வற்­றைச் சித்­தி­ரிப்­ப­தாக அவர்­கள் பகிர்ந்­து­கொண்ட அனு­ப­வங்­கள் அமைந்­தன.

தங்­க­ளின் தமி­ழா­சி­ரி­யர் விடுப்­பில் இருந்­த­போது, சீன வகுப்பு நடந்த அறை ஒன்­றில் நாற்­காலி, மேசை இருந்­தும் தரை­யில் உட்­கார தமிழ் மாண­வர்­க­ளுக்கு உத்­த­ர­விடப்­பட்­ட­தாக பெயர் குறிப்­பிட விரும்­பாத ஒரு­வர் தமக்கு நேர்ந்­த­தைப் பதி­விட்­டி­ருந்­தார். கழி­வ­றைக்­குச் செல்ல வேண்­டும் என்று சீன ஆசி­ரி­ய­ரி­டம் அவர் கேட்­டும் அனு­மதி மறுக்­கப்­பட்­டது. இத­னால் வகுப்­பறை­யி­லேயே சிறு­நீர் கழித்­து­விட்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

சீக்­கி­யர் ஒரு­வ­ரும் தமது அனு­ப­வத்­தைப் பகிர்ந்­து­கொண்­டார். தலைப்­பாகை அணிந்­தி­ருந்ததால் அவ­ரின் பள்ளி நண்­பர்­கள் அடிக்­கடி அவ­ரைக் கேலிச் செய்­த­தாக அவர் கூறி­னார். தொடக்­க­நிலை ஆறு மாண­வர்­கள் சிலர் அவ­ரைக் கழி­வ­றை­யில் வழி­ம­றித்­துத் தாக்­கி­ய­தா­க­வும் தலைப்­பா­கை­யைக் கிழித்­தெ­டுத்­த­தா­க­வும் பின்­னர் கழி­வுத் தொட்­டிக்­குள் தலையை முக்­கி­விட்டு அவ­ரைக் குத்­தி­ய­தா­க­வும் அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

இன­வா­தம் எந்த ரூபத்­தில் இருந்­தா­லும் அது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாது என்­றும் சிங்­கப்­பூர் பள்ளி­களில் இன­வா­தத்­திற்கு இட­மில்லை என்­றும் கல்வி அமைச்­சின் பேச்­சா­ளர் கூறி­னார்.

இன­வா­தம் என வரும்­போது கல்­வி­யா­ளர்­கள் தங்­க­ளின் துறைக்­குத் தகுந்­தாற்­போல் மிக உயர்ந்த தரத்­தைக் கொண்­டி­ருக்க வேண்­டும் என்று அமைச்சு எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

"ஆத­ர­வு­மிக்க, பாது­காப்­பான சூழல் வழங்கப்படுவதை எங்­கள் பள்ளி­கள் நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளன. இனம், சம­யம் என்ற பாகு­பா­டின்றி மாண­வர்­களும் கல்வி­யா­ளர்­களும் வலு­வான, நல்ல உறவு­களை வளர்த்­துக்­கொள்­ள­லாம். தங்­க­ளின் அக்­க­றை­க­ளைத் தெரி­விப்­ப­து­டன் ஆசி­ரி­யர்­க­ளி­ட­மும் நண்­பர்­க­ளி­ட­மும் இருந்து அவர்­கள் உதவி பெற­லாம்," என்­றது அமைச்சு. நற்­கு­ணம் மற்­றும் குடி­யி­யல் கல்வி, வர­லாற்­றுப் பாடம் போன்­றவற்றின் மூலம் வகுப்­ப­றை­யில் பல கலா­சா­ரங்­கள் சார்ந்த தலைப்பு­களும் இன­நல்­லி­ணக்­கத்­தின் முக்­கி­யத்­து­வ­மும் கற்­றுத்­த­ரப்­ப­டு­வ­தா­க­வும் கூறப்­பட்­டது.

இதற்கிடையே அனைத்து பள்ளி­க­ளி­லும் சக மாண­வர் ஆத­ர­வுக் கட்­ட­மைப்பு ஒன்று இவ்­வாண்டு இறு­திக்­குள் நடை­மு­றைக்கு வரும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது. இதன் மூலம் மாண­வர்­கள் ஒரு­வருக்­கொ­ரு­வர் ஆத­ர­வ­ளிப்­ப­து­டன் தேவை ஏற்­ப­டும்­போது தங்­க­ளின் நண்­ப­ருக்­காக குரல் கொடுப்பது பற்றி அறிந்­தி­டு­வர்.