உலகின் மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு

உலகின் மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு

1 mins read
c64b9bdc-93d2-4016-9752-1195084b6a02
-

கடந்த 1095ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க நாட்டில் உலகின் மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாக இருந்தது. இதன் பின்னர், 2015ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு கொண்டதாக இருந்தது.

இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ள இந்த வைரக்கல் ஜூன் மாதம் 1ஆம் தேதி அரசு துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. பல மில்லியன் வெள்ளி மதிப்புள்ள இந்த வைரக்கல்லை கொரோனா நோய்த்தொற்று முடிவடைந்த பின்னர் ஏலம் விட போட்ஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது.