விடுகதை

விடுகதை

1 mins read

1. வாசலில் வந்து நின்றவரை வரவேற்க ஆளில்லை.

2. ஒளியில் தொடர்வான்; இருளில் மறைவான்.

3. மூன்று பெண்கள் ஒரே முகம். மூத்த பெண் ஆற்றிலே; நடுப்பெண் காட்டிலே; கடைசிப் பெண் வீட்டிலே.

4. அனலிலே பிறப்பாள்; ஆகாயத்தில் பறப்பாள்.

5. கன்னங்கரிய அரங்கத்தில் வெள்ளைப்பந்து விளையாடும்.

6. கல்லும் கரடும், முள்ளும் முரடும், வேரும் விறகும்.

7. ஈரேழு பதினாலு இறகு மயிலாட, முந்நான்கு பன்னிரெண்டு முத்து மயிலாட, வராத பெண்களெல்லாம் வந்து விளையாட.

8. தேர் ஓடுகிறது; பூ உதிர்கிறது.

9. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான்.

10. ஐந்து காசுக்கு சரக்கு வாங்கி, இரண்டு வண்டியில் ஏற்றினேன். இன்னும் மீதி இருக்கிறது.

11. தீப்பொறி பறக்கும்; எரியாது. கையிலே பிடித்தால் சுடாது.