மற்றவர்களின் விவரங்களைக் கொண்டு முகக்கவசம்; சிறை

மற்றவர்களின் விவரங்களைக் கொண்டு முகக்கவசம்; சிறை

1 mins read
3113e32a-b40f-485a-921f-f4bd5ce3d473
ஸ்ரீநிவாசன் யுவராஜ், தன் சகாக்கள் ஏழு பேரின் தகவல்களைப் பயன்படுத்தி முகக் கவசங்களைப் பெற்றார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

இந்­தி­யா­வைச் சேர்ந்த ஸ்ரீநி­வா­சன் யுவ­ராஜ், 39, என்ற ஆட­வர், கொவிட்-19 சூழ­லில், தன் சகாக்­கள் ஏழு பேரின் தனிப்பட்ட தக­வல்­க­ளைப் பயன்­ப­டுத்தி இயந்­தி­ரத்­தில் இருந்து $84 மதிப்­புள்ள தெமா­செக் அற­நிறுவன முகக்­க­வ­சங்­க­ளைப் பெற்­றார்.

இந்­தக் குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட அந்த ஆட­வ­ருக்கு நேற்று ஏழு வாரம் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு கொரோனா தொற்று ஏற்­ப­டா­மல் தவிர்க்க உத­வும் வகை­யில் தெமா­செக் அறநி­று­வ­னம் கட்­டம் கட்­ட­மாக முகக்­க­வ­சங்­களை விநி­யோ­கித்து வந்­தது. நான்­கா­வது கட்­ட­மாக கடந்த மார்ச் மாதம் அது கொடுத்த முகக் கவ­சத்தை மக்­கள் மார்ச் 1 முதல் 14 வரை பெற்­றுக்கொள்­ள­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டது.

நாடு முழு­வ­தும் உள்ள இயந்­தி­ரங்­களில் ஒரு­வ­ரின் அடை­யாள அட்டை அல்­லது வேலை அனு­மதி அட்டை எண்­ணைப் பயன்­ப­டுத்தி முகக்­க­வ­சத்­தைப் பெற­லாம். யுவ­ராஜ் தன்­னி­டம் தன் சகாக்­க­ளின் பெயர் உள்ளிட்ட விவ­ரப் பட்­டி­ய­லை வைத்து இருந்­தார்.

அவற்­றில் ஏழு பேரின் விவ­ரங்­க­ளைத் தேர்ந்து எடுத்­துக் கொண்டு அந்த ஏழு பேரின் சம்­ம­தத்­தைப் பெறா­ம­லேயே மார்ச் 1ஆம் தேதி சுவா சூ காங் சமூக மன்­றத்­தில் உள்ள ஓர் இயந்­திரத்தில் இருந்து தலா $12 விலை­யுள்ள ஏழு முகக்­க­வ­சங்­க­ளை யுவ­ராஜ் பெற்­றார்.

அந்த சகாக்­களில் ஒரு­வ­ரான 53 வயது ஆட­வர் முகக் கவ­சத்­தைப் பெற முயன்று முடி யாமல் போனதை அடுத்து மார்ச் 4 ஆம்­ தேதி போலி­சி­டம் புகார் தெரி­வித்­தார்.