உற்பத்தித் துறை மே மாதம் 30% கூடியது

உற்பத்தித் துறை மே மாதம் 30% கூடியது

2 mins read

சிங்­கப்­பூ­ரில் உற்­பத்­தித் துறை மே மாதம் பெரு­ம­ள­வில் உயர்ந்­தது. ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் அந்த அதி­க­ரிப்பு 30 விழுக்­கா­டாக இருந்­தது. உற்­பத்­தித் துறை தொடர்ந்து ஏழா­வது மாத­மாக வளர்ச்சி கண்டு வரு­கிறது என்­பது பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­வ­ரு­கிறது.

புளூம்­பர்க் நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில் கலந்­து­கொண்ட பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள், மே மாதம் உற்­பத்­தித் துறை 24.1 விழுக்­காடு வளர்ச்சி அடை­யும் என்று முன்­னுரைத்து இருந்­தார்­கள்.

என்­றா­லும் அந்த மாதத்­தில் உற்­பத்­தித் துறை இதற்கும் மேலாக விரி­வ­டைந்து இருக்­கிறது.

உயி­ரி­யல் மருத்­துவ உற்பத்தித் துறை­யைச் சேர்க்­கா­மல் பார்த்­தால், உற்­பத்­தித் துறை வளர்ச்சி 29 விழுக்­கா­டாக இருந்­தது.

மாதச் சரி­யாக்க அடிப்­ப­டை­யில் ஒட்­டு­மொத்த உற்­பத்­தித் துறை வளர்ச்சி 7.2 விழுக்­கா­டாக இருந்­தது என்பது தெரியவந்துள்ளது.

எல்லா துறை­க­ளி­லும் வளர்ச்சி காணப்­பட்­டது. துல்­லி­யப் பொரு­ளி­யல் துறை சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது இந்த ஆண்டு மே மாதம் 58.6 விழுக்­காடு கூடி­யது.

சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில், இந்­தத் துறை இந்த ஆண்­டின் முதல் ஐந்து மாதங்­களில் 22.7 விழுக்­காடு வளர்ச்சி கண்டு இருக்­கிறது.

மின்­னணு உற்­பத்தி 23.2 விழுக்­காடு கூடி­யது. குறிப்­பாக கணி­னிச்­சில்லு தொழில்­துறை 25.5% வளர்ந்­தது.

மின்­னணுத் தொழில்­துறை இந்த ஆண்­டின் முதல் ஐந்து மாதங்­களில் 22.9% வளர்ச்சி கண்டு இருக்­கிறது.

போக்­கு­வ­ரத்து பொரு­ளி­யல் துறை கடந்த மே மாதம் 44 விழுக்­காடு கூடி­யது.

உயி­ரி­யல் உற்பத்தித் துறை 35.6% அதி­க­ரித்­தது. உற்­பத்­தித் துறையின் பொது­வான வளர்ச்சி மே மாதம் 27.8 விழுக்­காடு கூடி­யது. ரசா­ய­னத் துறை உற்­பத்தி ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் கடந்த மே மாதம் 16.2 விழுக்­காடு அதி­க­ரித்­த­தாக புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன.