எஸ்ஐஏ கரிம பாதிப்பு ஈட்டுத் திட்டம்; பயணிகளுக்கு வாய்ப்பு

எஸ்ஐஏ கரிம பாதிப்பு ஈட்டுத் திட்டம்; பயணிகளுக்கு வாய்ப்பு

1 mins read

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னங்­களில் அல்­லது ஸ்கூட் மலி­வுக் கட்­டண விமா­னங்­களில் பய­ணம் செய்­வோர், இந்­தோ­னீ­சியா, இந்­தியா, நேப்­பா­ளம் ஆகிய நாடு­களில் இடம்­பெ­றும் சுற்­றுச்­சூ­ழல் செயல்­திட்­டங்­க­ளுக்கு உத­வு­வ­தன் மூலம் தங்­கள் சுற்றுச்சூழல் பொறுப்பை நிறை­வேற்ற முடி­யும்.

தாங்­கள் பய­ணம் செய்­யும் விமா­னங்­கள் வெளியே விடும் கரிம கழி­வு­க­ளுக்குப் பொறுப்­பேற்­றுக்­கொண்டு அந்­தப் பொறுப்பை பயணி­கள் ஈடு­செய்­யும் வகையில் இந்த வாய்ப்பு கிட்­ட­வி­ருக்­கிறது.

இதற்­கான செயல்­திட்­டம் ஒன்றை நேற்று எஸ்­ஐஏ குழு­மம் தொடங்­கி­யது. இதன் ஒரு பகு­தி­யாக அவர்­கள் குறிப்­பிட்ட இணை­யத்தளங்­களில் இருந்து விமா­னம் புறப்­ப­டு­வ­தற்கு முன்­பாக அல்­லது அதற்­குப் பிறகு கரிம ஈட்­டுச் சான்றி­தழ்­களை வாங்­கி­யும் தங்­கள் பொறுப்பை நிறை­வேற்­ற­லாம்.

எஸ்­ஐஏ சரக்கு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான இணை­யத்­த­ளம் அடுத்த மாதம் முதல் தயாராகும்.

நிறு­வ­னங்­கள் இந்­தச் செயல்­திட்­டத்­தில் இந்த ஆண்டு நான்­கா­வது காலாண்டு முதல் பங்­கெடுத்­துக் கொள்­ள­லாம்.

இந்­தச் செயல்­திட்­டம் தொடங்­கிய பிறகு ஆறு மாத காலத்­திற்கு பய­ணி­கள் கொள்­மு­தல் செய்­யும் கரிம ஈட்­டுச் சான்­றி­தழ்­களை எஸ்ஐஏ நிறு­வ­ன­மும் ஸ்கூட் நிறு­வ­ன­மும் ஈடு­செய்­யும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.