ஆலோசனையை மீறி வீட்டை விட்டு வெளியேறியதாக வழக்கு

1 mins read

வீட்­டி­லேயே தங்கி இருக்­கும்­படி குடி­மைத் தற்­காப்­புப் பயி­லக வளாக மருத்­துவ நிலைய மருத்­து­வர் ஒரு­வர் தெரி­வித்து இருந்த ஆலோ­ச­னையை 22 வயது ஆட­வர் ஒரு­வர் அலட்­சி­யப்­ப­டுத்­தி­விட்­டார்.

அவர் வீட்­டை­விட்டு வெளி­யேறி தெம்­ப­னி­சில் இருக்­கும் இக்­கியா கடைக்­குச் சென்­றார். நக­ரில் இருக்­கும் ஸ்கேட் பார்க் விளை­யாட்டு இடத்­திற்­கும் போனார். பிடோக்­கில் ஒரு மாதை­யும் அவர் சந்­தித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. ஃபாதுல்லா அப்­துல் ரஹ்­மான் என்ற அந்த ஆட­வர் தொற்று விதி­மு­றை­கள் 2020ன் கீழ் நான்கு குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார்.

அவ­ருக்கு கொவிட்-19 தொற்று இருந்­தது என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. என்­றா­லும் தொற்று கண்­ட­றி­யப்­பட்ட தேதி பற்­றிய விவ­ரங்­கள் தெரி­ய­வில்லை.

ஃபாதுல்லா ஜூலை 22ஆம் தேதி குற்­றங்­களை ஒப்­புக்­கொள்ள இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­தது.

கேலாங் ஈஸ்ட் சென்ட்­ர­லில் இருக்­கும் தன் வீட்­டில் இருந்து ஃபாதுல்லா சென்ற ஆண்டு செப்­டம்­பர் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை வெளியே போகக்­கூ­டாது என்று அவ­ருக்­குக் கொடுக்­கப்­பட்ட முத­லா­வது மருத்­து­வச் சான்­றி­தழ் தெரி­வித்­தது. ஆனால் அவர் செப்­டம்­பர் 2ஆம் தேதி வீட்­டை­விட்டு வெளியே சென்­றார்.

அடுத்த நாளும் அவர் வீட்­டை­விட்டு வெளி­யே­றி­னார். அந்த மருத்­து­வர் ஃபாதுல்­லா­வுக்கு வேறு ஒரு மருத்­துவ சான்­றி­த­ழைக் கொடுத்­தார். அது செப்­டம்­பர் 17 முதல் 19 வரை ஃபாதுல்லா வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்­றது. ஆனால் அவர் அதை­யும் மீறி யதாகத் தெரிவிக்கப்பட்டது.