தாய்லாந்தில் பசியின் கொடுமையால் ஒரு வீட்டின் சுவரை உடைத்துக்கொண்டு யானை ஒன்று உணவை எடுத்த காட்சி இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தாய்லாந்தில் ஹுவாஹின் பகுதியைச் சேர்ந்த ஒரு யானைக்கு அகோரப் பசி. அது உணவு தேடி அலைந்து திரிந்தது. இரவு இரண்டு மணிக்கு ஒரு வீட்டை அடைந்தது.
பின்பக்க சுவரை இடித்துத் தள்ளிவிட்டு முகத்தை உள்ளே நுழைத்து அங்கிருந்த அரிசி, உணவுப் பண்டங்களை ஒரு கை பார்க்கத் தொடங்கியது அந்த யானை.
பின்பக்கம் ஏதோ சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது யானை தும்பிக்கையால் உணவு தேடுவதைக் கண்டனர். உடனே கூச்சல் போட்டு அதனை விரட்டாமல் காணொளி எடுத்துள்ளனர்.
அந்த யானை அங்கிருந்த உணவை உண்டு முடித்த பிறகு தானாக வந்த வழியே சென்றது.

