'ஒலிம்பிக் போட்டி எளிதாக இருக்காது'

'ஒலிம்பிக் போட்டி எளிதாக இருக்காது'

1 mins read

புதுடெல்லி: கடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளின் பூப்பந்துப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இவ்வாண்டு ஜப்பான் தலைநகரம் தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் அவர் தங்கம் வெல்வார் என அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக் கின்றனர்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல என்று பி.வி. சிந்து தெரிவித்துள்ளார். ஒவ்வோர் ஆட்டத்திலும் முழு கவனத்துடன் செயல்படப்போவதாக அவர் கூறினார்.