கேலப் டிரெசல் அபாரம்

கேலப் டிரெசல் அபாரம்

1 mins read
1be649af-035c-4989-8aff-34b10e18774e
ஆண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நிச்சல் போட்டியில் தனது முந்தைய உலகச் சாதனையை அபாரமான முறையில் முறியடித்தார் அமெரிக்க நட்சத்திரம்கேலப் டிரெசல். படம்: இபிஏ -

தோக்கியோ: அமெரிக்க நீச்சல் நட்சத்திரம் கேலப் டிரெசல் ஆண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் உலகச் சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 49.45 வினாடி. இதற்கு முன் இந்­தப் போட்­டி­யில் உல­கச் சாத­னை­யைப் படைத்­த­வ­ரும் இவரே. இதர போட்­டி­யா­ளர்­கள் அபாரமாக நீந்­தி­ய­தால் தங்­கம் வெல்ல உல­கச் சாத­னையை முறி­யடிக்­க­வேண்­டி­யி­ருந்­தது, ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் இவ்­வாறு அடிக்கடி நடக்காது எனக் கூறி சக போட்­டி­யா­ளர்­க­ளைக் கௌரவித்தார் டிரெசல்.

வெள்­ளிப் பதக்­கத்தை ஹங்கேரி­யின் கிரிஸ்­டொஃப் மிலாக்­கும் வெண்­க­லத்தை சுவிட்­சர்­லாந்­தின் நோ பொன்­டி­யும் வென்­ற­னர்.

பெண்­கள் 800 மீட்­டர் எதேச்சை பாணி நீச்­சல் போட்­டி­யில் தங்­கத்­தைக் கைப்­பற்­றி­னார் மற்­றோர் அமெ­ரிக்­க­ரான கேட்டி லடெக்கி. அவர் எடுத்­துக்­கொண்ட நேரம் 8 நிமி­டம் 12.57 வினாடி. வெள்­ளியை வென்­றார் அவ­ரது பரம வைரி­யான ஆஸ்­தி­ரே­லி­யா­வின் எரி­யார்ன் டிட்மஸ். வெண்­க­லப் பதக்­கம் இத்­தா­லி­யின் சிமோனா குவா­ட­ரெல்லா­விற்­குச் சென்­றது.

ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதன்முறையாக நடைபெற்ற ஆண்களும் பெண்களும் சேர்ந்து பங்கேற்கும் 100 மீட்டர் கலப்பு அஞ்சல் நீச்சல் போட்டியில் பிரிட்டன் தங்கம் வென்றது. 1908 ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குப் பிறகு இம்முறைதான் நீச்சல் போட்டிகளில் பிரிட்டன் ஆகச் சிறப்பாகச் செய்துள்ளது. போட்டிகளில் ஏழு பதக்கங்களை வென்றுள்ளது பிரிட்டன்.