தோல்வியுற்றார் பி.வி.சிந்து

தோல்வியுற்றார் பி.வி.சிந்து

1 mins read
fb1a03e4-3e00-4bff-8493-a4447d56367d
அரையிறுதிச் சுற்றில் சிந்து தோல்வி. படம்: ஏஎஃப்பி -

தோக்­கியோ: ஒலிம்­பிக் விளை­யாட்­டு­க­ளின் பெண்­க­ளுக்­கான ஒற்­றை­யர் பிரிவு பேட்­மிண்­டன் போட்­டி­யில் இந்­தி­யா­வின் பி.வி.சிந்து என்­ற­ழைக்­கப்­படும் புசர்லா வெங்­கட சிந்து தோல்வியடைந்துள்­ளார்.

காலிறுதிச் சுற்றில் தைவானின் தை ட்சூ-யிங்கிடம் 18-21, 12-21 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியுற்றார். சென்ற ஒலிம்பிக்கில் இந்­தப் பிரிவில் வெள்­ளிப் பதக்­கத்தை வென்­றார் சிந்து. அது, ஒலிம்­பிக் வர­லாற்றில் இந்­தியா வென்ற முதல் வெள்­ளிப் பதக்­கம். அவர் உல­கப் போட்டி­யின் நடப்பு வெற்றியாளரும்­கூட. உலக பேட்­மிண்­டன் போட்டிகளில் விருதை வென்ற முதல் இந்­தி­யர் என்ற பெருமையைப் பெற்­ற­வர் சிந்து.

அவரை வென்றுள்ள தை ட்சூ-யிங், இறுதியாட்டத்தில் சீனாவின் சென் யு ஃபெயுடன் மோதுவார்.

வெண்கலப் பதக்க ஆட்டத்தில் சீனாவின் ஹ பிங்ஜியாவைச் சந்திப்பார் சிந்து.