தோக்கியோ: சிங்கப்பூரின் படகோட்ட வீரர்களான கிம்பர்லி லிம் மற்றும் சிசிலியா லோ இருவரும் ஒலிம்பிக் 49எர் ஃப்எக்ஸ் பிரிவு படகோட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
இருவரும் ஒலிம்பிக் படகோட்டப் போட்டி வரலாற்றில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள முதல் சிங்கப்பூரர்கள். 21 படகுகள் தகுதிச் சுற்றில் பங்கேற்றன.
லிம், லோ இருவரும் செலுத்திய படகு 10வது இடத்தில் வந்தது.
அவர்கள் 97 புள்ளிகளைப் பெற்றனர்.
பிரேசிலைச் சேர்ந்த கஹேனா குன்சே மற்றும் மார்டினே கிராஃப் ஆகியோர் 70 புள்ளிகளைப் பெற்று முதலாவதாக முடித்தனர்.
நாளை மறுதினம் இறுதிச் சுற்று நடைபெறும்.
அதில் இந்தப் போட்டியில் சிங்கப்பூருக்கு முதன்முறையாகப் பதக்கம் வென்று தரும் இலக்கைக் கொண்டுள்ளனர் லிம், லோ.

