திடல்தடப் போட்டிகள்: விறுவிறுப்பான முடிவுகள்

திடல்தடப் போட்டிகள்: விறுவிறுப்பான முடிவுகள்

1 mins read

தோக்கியோ: பெண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம், வெள்ளி, வெண்கலம் மூன்று பதக்கங்களையும் அள்ளிச் சென்றுள்ளது ஜமைக்கா. தங்கம் வென்ற இலெயின் தாம்ப்சன்-ஹெரா போட்டியை 10.61 வினாடியில் முடித்து ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார்.

400 மீட்­டர் கலப்பு அஞ்­சல் ஓட்­டத்­தில் தங்­கத்­தைக் கைப்­பற்­றி­யது போலந்து. அந்­நாட்­டின் அணி 3 நிமி­டம் 9.87 வினா­டி­யில் போட்­டியை முடித்து ஒலிம்­பிக் சாதனை படைத்­தது. வெள்­ளிப் பதக்­கத்தை டோமி­னிக்க குடி­ய­ர­சும் வெண்­க­லத்தை அமெ­ரிக்­கா­வும் வென்­றன. ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் தங்கம், வெள்ளி இரண்டையும் தட்டிச் சென்றுள்ளது சுவீடன். வெண்கலப் பதக்கத்தை வென்றது ஆஸ்திரியா.