கூடுதல் தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் கவலை

2 mins read

பாரிஸ்: உல­கம் முழு­வ­தும் மேலும் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்கொள்­ளும் வரை கூடு­தல் தடுப்­பூசி போடு­வதை நிறுத்தி வைக்கவேண்டும் எனும் உலக சுகா­தார நிறுவனத்தின் வேண்­டு­கோ­ளைப் பொருட்

­ப­டுத்­தா­மல், ஜெர்­மனி, ஃபிரான்ஸ், இஸ்­ரேல் மற்­றும் சிலி ஆகிய நாடு­கள் கூடு­தல் தடுப்­பூசி போடும் திட்­டத்­தைத் தொடர்ந்து செயல்­ப­டுத்­த­வுள்­ளன.

உலக சுகா­தார நிறுவனம் வலு­வாக கூறி­யி­ருந்­தா­லும் கூடு­தல் தடுப்­பூசி குறித்த சில நாடு­க­ளின் முடிவு, கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான பாது­காப்­பில் பெரும் ஏற்­றத்­தாழ்­வு­களை எடுத்­துக்­காட்­டு­வ­தாக உள்­ளது.

டெல்டா வகை கொவிட்-19 கிரு­மித்­தொற்­றில் இருந்து தனது மக்­க­ளைப் பாது­காக்­கும் வகை­யில் பணக்­கார நாடு­கள் கூடு­தல் தடுப்­பூசி முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

ஃபிரான்­சில் செப்­டம்­பர் மாதத்­தில் இருந்து முதி­யோர், எளி­தில் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்­குக் கூடு­தல் தடுப்­பூசி போடப்­படும் என்று அதன் அதி­பர் இம்­மா­னு­வேல் மெக்­ரூன் கூறி­யுள்­ளார்.

அது­போல் ஜெர்­ம­னி­யும் தாதிமை இல்­ல­வா­சி­கள், முதி­யோ­ருக்கு செப்­டம்­பர் மாதம் முதல் தடுப்­பூசி போட முடிவு செய்­துள்­ளது. இஸ்­ரே­லிலோ கூடு­தல் தடுப்­பூசி போடும் பணி சென்ற மாதமே தொடங்­கி­விட்­டது.

தடுப்­பூசி விநி­யோ­கத்தை பணக்­கார நாடு­கள் அதி­கம் பயன்­ப­டுத்­திக் கொள்­வது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது என்ற நிறுவனத்தின் தலை­மை இயக்குநர் டெட்­ரோஸ் கெப்­ரியேசு­ஸ், கூடு­தல் தடுப்­பூசி போடும் பணி­யைக் குறைந்­த­பட்­சம் செப்­டம்­பர் மாத இறுதி வரை­யா­வது நிறுத்து வைக்­கு­மாறு அழைப்பு விடுத்­தார்.

பணக்­கார நாடு­கள் ஒவ்­வொரு 100 பேருக்­கும் 50 தடுப்­பூசி போடும் நிலை­யில், ஏழை நாடு­களில் ஒவ்­வொரு 100 பேருக்­கும் 1.5 தடுப்­பூசி மட்­டுமே போடப்­ப­டு­வ­தாக அமைப்பு கணக்­கிட்­டுள்­ளது.