நெடுந்தொலைவோட்டம்: கென்யாவிற்குத் தங்கம்

1 mins read

சப்­போரோ: ஒலிம்­பிக் விளையாட்டு­க­ளின் பெண்­கள் நெடுந்தொ­லை­வோட்­டப் போட்­டி­யில் கென்­யா­வின் பெரெஸ் ஜெப்சிர்­சிர் தங்­கம் வென்­றுள்ளார். போட்­டி­யின் கடைசி நிமி­டங்­களில் அபா­ர­மாக ஓடி தனது சக நாட்டவரான ப்ரி­கிட் கொஸ்­கையைத் தாண்டி தங்­கம் வென்றார் ஜெப்­சிர்­சிர்.

அவர் எடுத்­துக்­கொண்ட நேரம் 2 மணி­நே­ரம் 27 நிமி­டம் 20 வினாடி.

கொஸ்கை வெள்­ளிப் பதக்கத்தை வென்­றார். அமெ­ரிக்­கா­வின் மொலி செய்டல் வெண்­க­லப் பதக்­கத்தை வென்­றார்.

உல­கச் சாத­னை­யைப் படைத்­த­வர் கொஸ்கை. அவர் அல்­லது கென்­யா­வின் மற்ாறொரு வீராங்கனை­யான ருத் செப்பிங்கெட்­டிக் போட்­டியை வெல்வார் எனப் பர­வ­லாக எதிர்­பார்க்­க­ப்­பட்­டது.

ஆனால், 'ஹாஃப்-மரத்தான்' எனப்படும் 21 கிலோமீட்டர் தூர நெடுந்தொலைவோட்டத்தில் இரண்டு முறை உலக விருதை வென்றுள்ள ஜெப்சிர்சிர்தான் இந்தப் போட்டியில் வெற்றிகண்டார்.

தான் வெல்லப்போகும் உணர்வு வந்தவுடன் இன்னும் வேகமாக ஓட முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.

"கென்­யா­வைப் பிர­தி­நி­தித்து நாங்­கள் வென்­றுள்­ளோம். முதல் இரண்டு இடங்­களில் கென்யா வந்­துள்­ளது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கிய எனது குடும்­பம், எனது நாடான கென்யா அனைத்து தரப்பு­களை நினைத்­தும் நான் மகிழ்ச்சியடைகிறேன்," எனப் பெரு­மைப்­பட்­டார் ஜெப்­சிர்­சிர்.