சம்சுயி பெண்

சம்சுயி பெண்

1 mins read

தொலைவிலிருந்து தங்கள் தனித்துவமான சிவப்பு நிறத்தால் சம்சுயி பெண்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டனர். கனமான கல்லைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளில் இவர்கள் ஈடுபட்டனர். தற்பொழுது இதுபோன்ற வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன.

இந்தப் பெண்கள் பெரும்பாலும் தென் சீனாவைச் சேர்ந்தவர்கள். 1850களில் சீனாவின் பட்டுத் தொழில் ஏற்றம் கண்டதால் பலம் பொருந்திய பெண் ஊழியர் அணி உருவானாது. இவர்கள் 1930களில் புதிய வாழ்க்கையைத் தேடி சிங்கப்பூருக்கு வந்தனர்.

இவர்கள், கண்களுக்கு எளிதில் புலப்படும் வகையில் சதுர வடிவ சிவப்பு நிற தலைத்தொப்பிகள், கறுப்பு அல்லது அடர் நீல நிற சீன மேல் சட்டையும் கால் சட்டையும் அணிந்திருப்பார்கள். பழைய ரப்பர் டயர்களால் செய்யப்பட்ட செருப்புகளை அணிந்திருந்தனர். இவர்கள் 'சம்சுயி' என்று அழைக்கப்பட்டனர்.

இவர்களின் சிவப்பு நிறத் தொப்பி, ஆட்கள் இருப்பதை அடையாளம் காட்டியதால் வேலை இடங்களில் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.

சம்சுயி பெண்கள் சகோதரத்துவத்தின் அடையாளமாக இருந்தனர். சிலர் தனியாக, சிக்கனமாக, சுதந்திரமாக வாழ்ந்தனர். சிலர் பலருடன் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களில் பலர் சைனா டவுனில் வசித்தனர். சம்சுயி பெண்கள் பல்வேறு கட்டுமானத் தளங்களுக்கு கால்நடையாகவே சென்று வந்தனர்.

அவர்கள் கட்டிய கட்டடங்களில் தோபாயோவில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள், முன்னாள் ஆசியா காப்பீட்டு கட்டடம் தற்போதைய 'அஸ்காட் ராஃபிள்ஸ் பிளேஸ்', சிலேத்தாரில் உள்ள கறுப்பு வெள்ளை பங்களாக்கள் முதலியவை அடங்கும்.