குடும்பங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவும் அஞ்சலி

குடும்பங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவும் அஞ்சலி

3 mins read

இந்­தி­யா­வைப் பூர்­வீ­க­மா­கக் கொண்­டி­ருக்­கும் திரு­மதி அஞ்­ச­லி­யும் (படம்) அவ­ரது குடும்­பத்­தா­ரும் சிங்­கப்­பூ­ருக்கு வந்து 6 ஆண்­டு­க­ளுக்கு மேலா­கி­விட்­டது.

நல்ல எதிர்­கா­லத்­துக்கு வழி­வ­குத்­தி­ருக்­கும் சிங்­கப்­பூ­ருக்கு தங்­க­ளது பங்­கினை ஆற்­றும் கடப்­பாட்­டு­டன் இதர சமூ­கப் பங்­கா­ளி­க­ளு­டன் சேர்ந்து முதி­யோர்­க­ளுக்கு உணவு விநி­யோ­கம் செய்­தல், அவர்­களை மருத்­து­வச் சந்­திப்­பு­க­ளுக்கு அழைத்­துச் செல்­லு­தல், போன்ற நட­வ­டிக்­கை­களில் 44 வய­தா­கும் திரு­மதி அஞ்­சலி குமார் ஈடு­பட்டு வந்­தார்.

மேலும் ஆக்­கப்­பூர்­வ­மான வழி­களில் தாம் உதவ வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் அப்­லி­ஃப்ட் எனப்­படும் குடும்ப மேம்­பாட்டு செயல்­திட்­டங்­களில் ஒன்­றான குடும்ப நண்­பர், முன்­னோ­டித் திட்­டத்­தில் (Family Befriender) இணைந்­து­கொண்­டார். நலிந்த குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு உத­வும் திட்­டம் அது. அதற்­கு­றிய பயற்­சி­களும் அவ­ருக்கு முறை­யாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

8 வயது முதல் 21 வயது வரை உள்ள 6 பிள்­ளை­க­ளைக் கொண்ட ஒரு குடும்­பத்­தி­ன­ரு­டன் இத்­திட்­டத்­தின் வழி திருமதி அஞ்­சலி அறி­மு­கம் ஆனார்.

அக்­கு­டும்­பத்­தின் இல்­லத்­த­ர­சி­யான தாயா­ருக்கு அண்­மை­யில் புற்­று­நோய் உள்­ளது தெரி­ய­வந்­தது. அத்­து­டன் ஒரு கிடங்கு ஊழி­ய­ராக அவ­ரது கண­வர் பணி­யாற்­றி­வந்­தார். கடந்த ஆண்டு, செரி­மா­னப் பிரச்­சி­னை­க­ளால் பாதிப்­ப­டைந்த கண­வர், அறுவை சிகிச்சை செய்­து­கொள்ள நேர்ந்­த­தால், தற்­பொ­ழுது அவர் உடல்­ந­லம் தேரி வரு­கி­றார். அத­னால் அவர் வெகு நேரம் பணி­யாற்ற முடி­யா­மல் போனது.

குடும்­பத்­தின் மூத்த மகன் முழு நேர தேசிய சேவை புரிந்­து­கொண்­டி­ருக்­கி­றார். வெவ்­வேறு மருத்­து­வப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கும் மற்ற மூன்று பிள்­ளை­கள், தற்­போது தொடக்­கப் பள்­ளி­யில் பயில்­கின்­ற­னர்.மாதத்­தில் ஒரு முறை­யா­வது இந்­தக் குடும்­பத்தை திரு­மதி அஞ்­சலி சந்­திக்­கச் செல்­கி­றார். மற்ற சந்­தர்ப்­பங்­களில் அத்­தா­யாரை தொலை­பேசி வழி அழைத்து நலம் விசா­ரித்து திரு­மதி அஞ்­சலி உரை­யா­டு­வார்.

நிதிப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்ள இந்­தக் குடு­பத்­துக்கு சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் சமூக சேவை அலு­வ­ல­கம் உத­வி­வ­ரு­கின்­றது.

கூடு­த­லாக மற்ற சமூ­கப் பங்­கா­ளி­க­ளைத் தொடர்­பு­கொண்டு, மளி­கைப் பொருட்­களை அக்­கு­டும்­பத்­துக்­குக் கிடைக்க திரு­மதி அஞ்­சலி உதவி வரு­கின்­றார்.

"தொடக்­கத்­தில் அப்­லிப்­ஃட் குடும்ப நண்­பர் திட்­டத்­தில் சேர்ந்­த­போது, நான் உத­வப்­போ­கும் குடும்­பத்­தின் நம்­பிக்­கையை எப்­படி பெறப்­போ­கி­றேன் என்ற ஐயம் இருந்­தது. ஆனால் என்னை ஏற்­றுக்­கொண்டு குடும்ப பிரச்­சி­னை­களை வெளிப்­ப­டை­யா­கப் பகிர்ந்­து­கொண்­ட­தில் ஒரு இயல்­பான உறவை என்­னால் நிலை­நாட்ட முடிந்­தது" என்று கூறி­னார் திரு­மதி அஞ்­சலி.

தமக்­கும் இரு பிள்­ளை­கள் இருப்­ப­தால், குழந்­தை­க­ளின், குடும்­பத்­தின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய எதிர்­நோக்­கும் சவால்­க­ளைத் தாம் உணர்­வ­தா­க­வும், அது குறித்த உத­வி­களை அக்­கு­டும்­பத்­துக்கு வழங்க தாம் தயா­ராக இருப்­ப­தா­க­வும் திரு­மதி அஞ்­சலி குறிப்­பிட்­டார்.

உதா­ர­ண­மாக குடும்­பத்­தின் மூத்த மக­னுக்கு அடிப்­படை நிர­லி­டும் திறன்­களை இல­வ­ச­மாக கற்­றுக்­கொ­டுக்­கத் தயா­ராக இருப்­பதை குடும்­பத்­தி­ன­ரி­டம் திரு­மதி அஞ்­சலி தெரி­வித்­துள்­ளார். "அவர்­க­ளால் சுய­மாக முயற்சி செய்து வாழ்க்­கைத் தரத்தை உயர்த்­திக்­கொள்ள முடி­யும் என்ற ஊக்­கம் தரு­வது முக்­கி­யம். அந்த வகை­யில் கல்வி அதற்கு இன்­றி­ய­மை­யாத பங்­காற்ற முடி­யும் என்று நம்­பு­கின்­றேன்" என்­றார் திரு­மதி அஞ்­சலி.

இவ­ரின் அர்த்­த­முள்ள சமூ­கப் பங்­க­ளிப்­பைப் பார்த்து உற்­சா­கம் அடைந்­துள்ள அவ­ரது கண­வர் திரு. பங்­கஜ் குமார், 45, கூடிய விரை­வில் அப்­லி­ஃப்ட் சமூக முன்­னோடி, குடும்ப நண்­பர் திட்­டத்­தில் இணை­ய­வுள்­ளார்.

சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு ஒரு நேர்மறை­யான தாக்­கத்தை உண்­டாக்க முடி­வ­தில் மகிழ்ச்சி அடை­யும் இத்­தம்­ப­தி­யி­னர் தொடர்ந்து வெவ்­வேறு சமூ­கத் தொண்­டு­களில் ஈடு­பட்டு நற்­சே­வை­யாற்ற கடப்­பாடு கொண்­டுள்­ள­னர்.