கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எங்களுக்கு கல்வியை மட்டும் கற்பிக்கவில்லை. நல்ல பண்புகளையும் நல்லொழுக்கத்தையும் கற்பிக்கிறீர்கள். எதிர்காலத்தில் எங்களை உன்னதமான மனிதர்களாக வாழ வைக்கிறீர்கள். இன்றைய தலைவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் உங்களின் மாணவர்கள்தான் என்பதை நினைக்கும்போது நாமும் அதுபோல் வருவதற்கு வழி இருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.
உங்கள் விருப்பு வெறுப்புகளை வீட்டிலேயே வைத்துவிட்டு பள்ளி வந்ததும் எங்களை உங்கள் பிள்ளைகளாக நினைத்து, எங்களை வழிநடத்துகிறீர்கள். உங்களுக்கு இந்த நன்னாளில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

