கட்டுப்பாடுகள் தளர்கின்றன; மேலும் பல நாட்டினர் வரலாம்

கட்டுப்பாடுகள் தளர்கின்றன; மேலும் பல நாட்டினர் வரலாம்

2 mins read

சிங்­கப்­பூர், மேலும் பல நாடு­க­ளின் சுற்­றுப் பய­ணி­கள் இங்கு வர அனு­ம­திக்க ஏது­வாக கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்­து­கிறது. போலந்து, சவூதி அரே­பியா உள்­ளிட்ட மேலும் பல நாடு­க­ளைச் சேர்ந்த பய­ணி­கள் முன்­னி­லும் குறை­வான நிபந்­தனை­க­ளு­டன் சிங்­கப்­பூ­ருக்கு வர இதன் மூலம் அனு­மதி கிடைக்­கும்.

என்­றா­லும் இங்கு தரை­யி­றங்கிய பிறகு அவர்­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.

தனி­மைக் காலம் முன்­பை­விட குறை­வான நாட்­க­ளாக இருக்­கும். அல்­லது விரும்­பி­னால் அவர்­கள் வீட்­டி­லேயே தனி­மை­யில் இருந்து கொள்­ள­லாம்.

கொவிட்-19 தொற்று எப்­படி இருக்­கிறது என்­பதை அடிப்­ப­டை­யாக வைத்து பல நாடு­க­ளை­யும் நான்கு பிரி­வாக சிங்­கப்­பூர் வகைப்­படுத்தி இருக்­கிறது.

கொவிட்-19 தொற்று ஆபத்து குறை­வாக இருக்­கும் நாடு­கள் முதல் பிரி­வில் இருக்­கின்­றன. போலந்து, சவூதி அரே­பியா நாடு­கள் செப்­டம்­பர் 22ஆம் தேதி இரவு 11.59 முதல் இரண்­டா­வது பிரி­வில் சேர்க்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

ஆஸ்­தி­ரே­லியா, புருணை, கனடா, ஜெர்­மனி, நியூ­சி­லாந்து, தென்­கொ­ரியா ஆகிய நாடு­கள் ஏற்­கெ­னவே இந்­தப் பிரி­வில் இருக்­கின்­றன.

இப்­பி­ரி­வில் உள்ள நாடு­களில் இருந்து புறப்­ப­டு­வோர், 48 மணி நேரம் முன்­ன­தாக பிசி­ஆர் பரி­சோதனை செய்து கொண்­டி­ருக்க வேண்­டும். இங்கு தரை­யி­றங்­கும்­போ­தும் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும். ஏழு நாட்­கள் தனிமையில் இருக்க வேண்­டும்.

கடைசி நாளன்று மூக்கு திரவ பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்டும் என்­பது நிபந்­தனை.

பல்­கே­ரியா, செக் குடி­ய­ரசு, பிரான்ஸ், லாட்­வியா, போர்­சுக்­கல், ஸ்பெ­யின் ஆகிய நாடு­கள் பிரிவு 3ல் சேர்க்­கப்­படும் என்­றும் அமைச்சு தெரி­வித்­தது. இந்த நாடு­க­ளைச் சேர்ந்த முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் இங்கு செப்டம்­பர் 22 இரவு 11.59 மணி முதல் 14 நாட்­கள் வீட்­டி­லேயே தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள ஏது­வாக விண்­ணப்­பிக்­க­லாம்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் 14 நாட்­கள் குறிப்­பிட்ட இடத்­தில் தனி­மை­யில் இருக்­க­வேண்­டும்.

சிங்­கப்­பூ­ருக்குப் புறப்­ப­டு­வ­தற்கு முந்­தைய 21 நாட்­க­ளுக்­குள் இந்­தோ­னீ­சி­யா­வுக்குச் சென்று வந்­திருக்­கும் அனைத்துப் பய­ணி­களும் செப்­டம்­பர் 22ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் சாங்கி விமா­ன­நி­லை­யம் வழி இடை­வ­ழிப் பய­ணி­யாக வந்து செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வர்­என்­றும் அமைச்சு தெரி­வித்தது.

இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள் இங்கு தரை­யி­றங்­கும்­போது பிசிஆர் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்டும் என்­றும் சுகாதார அமைச்சு குறிப்­பிட்டு உள்­ளது.